காவல்துறை அதிகாரியாக நடிக்கும் சசிகுமார்

1 hour ago 19

ad14425d-3181-4e0e-8260-08913f08c496

சசிகுமார். - படம்: ஓடிடி பிளே

Sasikumar acting as a police officer

Actor Sasikumar, enjoying recent film successes, will play a serious police officer in director Manikandan's upcoming movie. The film is planned to include thrilling action sequences, with Sasikumar's character being memorable despite fewer dialogues. Actress Manasa Varanasi has been signed as the heroine. Manikandan previously directed 'Ninaithu Ninaithu Parthen'.

Generated by AI

எப்போதுமே சிரித்த முகத்துடன் காணப்படுவார் சசிகுமார். தற்போது அந்தச் சிரிப்பு அவர் நடித்த சில படங்களின் வெற்றியால் மேலும் பெரிதாகியுள்ளது.

இந்நிலையில், சிரிப்பு சசிகுமாரை ‘சீரியஸ்’ சசிகுமாராக மாற்றப்போகிறாராம் இயக்குநர் மணிகண்டன்.

இவரது அடுத்த படத்தில் சசிகுமார் காவல் அதிகாரியாக நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தில் சசிகுமாருக்காக பல அதிரடி‌ச் சண்டைக் காட்சிகளை படமாக்க உள்ளனர். குறைவான வசனங்கள்தான் என்றாலும் சசிகுமாரின் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் என்கிறாராம் இயக்குநர்.

இவர் ஏற்கெனவே ‘நினைத்து நினைத்துப் பார்த்தேன்’ என்ற படத்தை இயக்கியவர். இவரது அடுத்த படத்தின் நாயகியாக மானசா வாரணாசி ஒப்பந்தமாகியுள்ளார்.

Read Entire Article