எரிபொருள் விநியோகச் சிக்கலால் சிங்கப்பூர் சாலைப் பணிகளில் தாமதம்

23 minutes ago 9

e98d87c6-973f-48e4-b085-ebfa0ed987c1

சாலை அமைப்பதற்கான பெட்ரோலிப் பொருளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. - படம்: விக்கிபீடியா

Singapore roadworks delayed due to fuel supply problems.

Singapore's road construction companies face project delays by months due to global supply disruptions and rising material costs. There is a critical shortage of bitumen, a petroleum product essential for roads, with material prices soaring up to 60%. These issues stem from ongoing global Crude Oil supply disruptions, particularly high-density crude required for bitumen production, attributed to confrontations in the Middle East.

Generated by AI

உலகளாவிய விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாகவும் விலைவாசி உயர்வு காரணமாகவும் சிங்கப்பூரின் சாலை கட்டுமான நிறுவனங்கள் தாமதத்தை எதிர்நோக்கி வருவதாக சேனல் நியூஸ் ஏஷியா செய்தி வெளியிட்டுள்ளது.

விநியோகச் சிக்கல் காரணமாக, சாலைகளையும் விமான ஓடுபாதைகளையும் அமைக்கத் தேவையான ‘பிடுமன்’ பெட்ரோலியப் பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

அண்மை மாதங்களாக சாலை கட்டுமானப் பொருள்களின் விலை 60 விழுக்காடு வரை உயர்ந்துவிட்டதாக சிஎன்ஏவிடம் பேசிய சில குத்தகையாளர்கள் கூறினர்.

மேலும், விநியோகப் பற்றாக்குறையால் மாற்றுவழிகளைத் தேடும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக சாலைக் கட்டுமானப் பணிகள் மாதக்கணக்கில் தாமதமடைவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் இடையூறுகளே இதற்குக் காரணம் என்கின்றனர் அவர்கள்.

அத்தகைய இடையூறுகள் காரணமாக பிடுமன் உற்பத்திக்குத் தேவையான அதிக அடர்த்தி கொண்ட கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கிறது என்றும் தொழில்துறை வல்லுநர்கள் சிஎன்ஏவிடம் கூறியுள்ளனர்.

Read Entire Article