தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த். - படம்: இந்து தமிழ் திசை
TVEK warns party workers.
The Thavega party instructed its volunteers and members to strictly avoid public inconvenience from banners, hoardings, or celebrations in public places. General Secretary N. Anand stated that members should not obstruct traffic, aligning with the party's aim for Tamil Nadu's welfare. Severe action will be taken against those who violate these directives.
Generated by AI
சென்னை: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தவெக தொண்டர்கள் தட்டிகள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாதுஎன்று அக்கட்சி அறிவித்துள்ளது.
அதேபோல் பொது இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
“தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். எனவே, தவெகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையிலோ ஈடுபடக்கூடாது,” என்று குறிப்பிட்டார்.
.png)






English (US) ·