145ஆவது கதைக்களம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) மாலை 4 மணிக்கு தேசிய நூலகத்தில் நடைபெறும். - கோப்புப்படம்: இணையம்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) மாலை 4 மணிக்கு தேசிய நூலகத்தின் முதல் தளத்திலுள்ள ‘VBR’ அறையில் நடைபெறவிருக்கிறது.
உள்ளூர்ப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடல் அங்கத்தில், எழுத்தாளர் சிவக்குமார் கே.பி. எழுதிய ‘கொஞ்சம் காபி... கொஞ்சம் கதைகள்...’ சிறுகதைத் தொகுப்பு இடம்பெறவுள்ளது.
திருவாட்டி ஸ்வர்ணலதா ஆவுடையப்பன் நூல் அறிமுகம் வழங்குவார். திருவாட்டி எழிலி கருணாகரன், திரு அன்பரசன் நாகலிங்கம் இருவரும் நூலாசிரியருடன் கலந்துரையாடலில் பங்கேற்பர்.
‘இதயத்தில் நின்றவை’ அங்கத்தில் வாசகர்கள் தங்கள் மனத்தில் நிலைத்திருக்கும் புனைவுகள் குறித்து உரையாற்றுவர்.
கதைக்களத்திற்கு வந்திருக்கும் போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்.
செப்டம்பர் மாதப் போட்டிகள்
நூல் அறிமுகப் போட்டிக்கு சிங்கப்பூர்த் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட அறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.
சிறுகதைப் போட்டிக்கான தொடக்கவரிகள்
உயர்நிலைப்பள்ளி மாணவர் பிரிவுக்கான தொடக்கவரிகள்: ‘தேசிய தினம் நெருங்கும் வேளையில், ‘என் நெஞ்சில் படபடப்பு அதிகரித்தது’. 200-300 சொற்களுக்குள் கதை எழுத வேண்டும்.
இளையர் பிரிவு: 300-400 சொற்களுக்குள் எழுத வேண்டும். ‘முடிவைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அருகில் இருந்தவரை கவனிக்கத் தவறிவிட்டேன்’ என்பது இப்பிரிவுக்கான தொடக்கவரிகள்.
பொதுப்பிரிவு: 400-500 சொற்களுக்குள் எழுத வேண்டும். ‘வட்டப்பாதை ரயிலில் ஏறிய எனக்கு, என்னுடைய வாழ்க்கையும் வட்டமடிப்பதாகவே தோன்றியது.’ என்பது இப்பிரிவுக்கான தொடக்கவரிகள்.
படைப்புகளை அனுப்ப இறுதிநாள்: 2026 ஆகஸ்ட் 28
மேல்விவரங்களுக்கு காண்க: https://www.singaporetamilwriters.com/16
தொடர்புக்கு: மணிமாலா மதியழகன் - 8725 8701, பிரேமா மகாலிங்கம் - 9169 6996
.png)






English (US) ·