கன்னட சினிமா தற்போது ஃபுல் பார்மில் இருக்கும் நிலையில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் தான் நடிக்க உள்ள பிரம்மாண்ட படமான கேஜிஎஃப் 3 பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் யஷ்.
14
KGF 3 movie update
கன்னட நடிகர் 'ராக்கிங் ஸ்டார்' யஷ் இப்போது சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகராக ஜொலித்து வருகிறார். இதற்கு காரணம் கேஜிஎஃப் திரைப்படம் தான். யஷ் நடிப்பில் தற்போது 'டாக்ஸிக்' மற்றும் பாலிவுட் படமான 'ராமாயணா பார்ட்-1' ஆகியவை உருவாகி வருகிறது. ராமாயணா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான யஷ், கேஜிஎஃப் படம் மூலம் கன்னட நடிகர் என்ற நிலையிலிருந்து பான்-இந்தியா ஸ்டாராக உயர்ந்தார். இன்று யஷின் மார்க்கெட் பன்மடங்கு அதிகரித்து உள்ளது.
24
யஷுக்கு வாழ்க்கை கொடுத்த கேஜிஎஃப்
கேஜிஎஃப் படத்திற்குப் பிறகு, நடிகர் யஷ் பல நேர்காணல்களில் பேசியுள்ளார். கன்னட மொழிக்கு மட்டுமே சொந்தமாக இருந்த யஷ், 'கேஜிஎஃப் பார்ட் 1' மற்றும் 'கேஜிஎஃப் பார்ட் 2' படங்களுக்குப் பிறகு உலக அளவில் பிரபலமானார். அதன் பிறகு யஷின் நேர்காணல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. யஷின் பேச்சுக்கு கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். அப்படி ஒரு நேர்காணலில் யஷ் பேசிய விஷயம் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
34
கேஜிஎஃப் 3 அப்டேட்
பான்-இந்தியா ஸ்டாரான யஷ்ஷிடம் எங்கு சென்றாலும் கேட்கப்படுவது ஒரே ஒரு கேள்விதான்! அது வேறு ஒன்றுமில்லை, உங்கள் 'கேஜிஎஃப் 3' எப்போது வரும் என்பதுதான். முன்பு இதுபற்றி மழுப்பலாகப் பேசி வந்த யஷ், இப்போது தெளிவான ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார். பாலிவுட் நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து யஷ் பேசியுள்ளார். நிச்சயமாக கேஜிஎஃப் 3 படம் உருவாகும்... ஆனால் இப்போது இல்லை. ஏனென்றால், நான் தற்போது வேறு இரண்டு ப்ராஜெக்ட்களில் பிஸியாக இருக்கிறேன். அதுமட்டுமல்ல, கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீலும் வேறு படங்களில் பிஸியாக இருக்கிறார். ஆனால், நாங்கள் இருவரும் போனில் பேசும்போது கேஜிஎஃப் 3 செய்வது பற்றி பேசிக்கொள்வோம்.
44
நம்பிக்கையை பணமாக்க விரும்பவில்லை
இருவருக்குமே கேஜிஎஃப் படம் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளது. ஆனால், இருவரும் அதில் முழு கவனம் செலுத்த வேண்டும். எனவே, எங்கள் கையில் இருக்கும் மற்ற படங்கள் முடிந்த பிறகுதான் அந்தப் படம் தொடங்கும். கேஜிஎஃப் படத்திற்கு இருக்கும் கிரேஸையும், மக்கள் நம்பிக்கையையும் நாங்கள் பணமாக்க விரும்பவில்லை. ஆனால், கேஜிஎஃப் படம் திரைக்கு வரும்போது, அது முந்தைய இரண்டு படங்களையும் மிஞ்சும் வகையில் இருக்க வேண்டும். அது ஒரு புதிய சாதனையை உருவாக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி அது உருவாக வேண்டும். எனவே, இருவரும் நேரம் ஒதுக்கி அந்தப் படத்தை நிச்சயம் செய்வோம். ஆனால், அதற்கான காலம் கூடி வரும்போதுதான் அது சாத்தியம்' என்று ராக்கிங் ஸ்டார் யஷ் கூறியுள்ளார்.