காரைக்குடி திராவிடப் பெரும் புலவர் ஆ.பழநி நூல்கள் நாட்டுடைமை கழகத் தலைவர் ஆசிரியர்- மேனாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி-பாராட்டு விழா

8 hours ago 5

காரைக்குடி, ஜூலை 21- காரைக்குடி மண்ணின் மைந்தரும், மூத்த தமிழறிஞரு மான திராவிடப் பெரும் புலவர் ஆ.பழநி அவர்கள் எழுதிய 18 நூல்களைக் கடந்த தி.மு.க. ஆட்சியில் திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாட்டுடைமை ஆக்கி கவிஞரின் குடும்பத் தாருக்கு  ரூ 10 இலட்சம் பரிவுத் தொகை யினையும் வழங்கினார்கள்.

அதற்காகத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் நன்றி பாராட்டும் நிகழ்ச்சி காரைக்குடி கிருஷ்ணா கார்டன் அரங்கில்  சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்விற்குத் தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலரும், மேனாள் அமைச்சருமான சீரிய பகுத்தறிவாளர் மு.தென்னவன் தலைமை தாங்கினார்.

புலவர் ஆ.பழநி அறக்கட்டளைத் தலைவரும், புலவரின் மரபுரிமை வாரிசு மான சுப.அழகுபாண்டியன் வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.

காரைக்குடி மாநகரத் துணை மேயரும், மாநகரத் தி.மு.க. செயலாளருமான நா.குணசேகரன், வல்லநாடு கல்விக்குழும இயக்குனர், சீரிய பகுத்தறிவாளர் பொறி யாளர் சா.நடராசன், புலவரின் பேரன் தொழிலதிபர் கண்டனூர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலைக்கோயில் நாட்டியப் பள்ளி இயக்குநர் கலைமாமணி முனைவர் மா.சுப.சரளா, திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தி.மு.க. மாநில இலக்கிய அணிச் செயலாளர் கவிச்சுடர் இரா.சு. கவிதைப் பித்தன் ஆகியோர் பாராட்டரங்கில் உரையாற்றினார்கள்.

உரியோருக்கு உரிய மரியாதையைச் செய்து, திராவிட இயக்கத்தின் இலக்கியங்களை நாட்டுடைமை மூலம் பரவலாகக் கொண்டு செல்ல வழிவகுத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலினுக்கும் அனைவரும் நன்றி தெரிவித்து உரையாற்றினர்.

திராவிட இயக்க மூத்த முன் னோடிகள் அண்ணா தமிழ்க் கழகச் செயலாளர் அ.கதிர்வேல், தி.மு.க. மேனாள் நகர்மன்ற உறுப்பினர் 90 வயதை எட்டிய சொக்கநாதன், திருக்குறள் மெய்யுரை எழுதியவரும், மேனாள் நகர்மன்ற உறுப்பினருமான குறள் மிகு சுப.பரமசிவம், தி.மு.கழகத் தலைமைக் கழகச் சொற்பொழிவாளரும், மதுரை திருக்குறள் மன்றத் தலைவருமான மு.க. இராமகிருஷ்ணன் ஆகியோருக்குச் சிறப்பு செய்யப்பட்டது.

அறக்கட்டளைச் செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா இணைப்புரை வழங்கிட, அறக்கட்டளைப் பொரு ளாளர் வா. கிருஷ்ண பிரசாத் நன்றியுரை யாற்றினார்.

இந்த நிகழ்வில் திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் கொ.மணி வண்ணன், மாவட்ட துணைச் செயலா ளர் இ.ப.பழனிவேலு, மாவட்ட ப.க. செயலாளர் ந.செல்வராசன், தேவ கோட்டை நகரத் தலைவர் வீர.முருகப்பன், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் அ.அரவரசன், தேவ கோட்டை நகர அமைப்பாளர் நா.பாரதி தாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் தி.செயலெட்சுமி, பலவான்குடி ஆ.சுப்பையா, கல்லல் ஒன்றியச் செயலாளர் கொரட்டி வீ.பாலு, சூரக்குடி மணிவண்ணன், அமராவதி புதூர் சண்முகநாதன், பேராசிரியர் நெல்லை பாபு,  துரை.குமணன், தி.மு.கழக மாவட்ட பொருளாளர் சுப.துரைராசு, மாவட்டப் பிரதிநிதி அ.சேவியர்,  நகர தி.மு.க. அவைத் தலைவர் சன்.சுப்பையா, நகர  மேனாள் இளைஞரணி அமைப்பாளர் ஆர்.கே.பி. முனீஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர் கலா காசிநாதன், மேனாள் நகர்மன்ற உறுப்பினர்கள் இராம.அன்பழகன், மெ.பழநியப்பன், தி.மு.கழக வட்டச் செயலாளர் இரா.இராதாகிருஷ்ணன், காரைக்குடி தொழில் வணிகக்கழகத் தலைவர்  கண்ணப்பன், பொருளாளர் சையது, காங்கிரசு கமிட்டி நகரத் தலைவர் மெ.சண்முகதாஸ், குழந்தைகள் நல மருத்துவர் து.கார்த்திகேயன், தமிழ் இன உணர்வாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், நகரின் முக்கியப் பிரமுகர்கள், தொழி லதிபர்கள் என ஏராளமானோர் பங் கேற்றனர்.

புலவர் ஆ.பழநி குடும்பத்தினர் அனைவருக்கும் சிற்றுண்டி, தேநீர் வழங்கி வரவேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேரா.சுப.வீரபாண்டியன், இராமசாமி தமிழ்க் கல்லூரி மேனாள் முதல்வர் தெ.முருகசாமி ஆகியோர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி படிக்கப்பட்டு நன்றி தெரிவித்தும், புலவர் ஆ.பழநி அவர்களின் தனிச் சிறப்புகள் அடங்கிய ஒரு அறிக்கையும், காரைக்குடி அண்ணா தமிழ்க் கழகம் வெளியிட்ட நன்றிக் கடிதமும் அனைவருக்கும் வழங் கப்பட்டது.

Read Entire Article