‘கிரிஸ்ஃபிளையர்’ அதிர்ஷ்டக் குலுக்கு மின்னஞ்சல் மோசடியாக இருக்கலாம்

12 hours ago 5

1930bf21-9862-4f0c-b128-4bade34b3c99

மின்னஞ்சலைப் பெறுபவர்கள், அதில் உள்ள எந்த இணைப்புகளையும் சொடுக்கவோ திறக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. - படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

‘கிரிஸ்ஃபிளையர் ஆண்டுவிழாக் குலுக்கல்’ (KrisFlyer Anniversary Draw) குறித்த மின்னஞ்சல் உங்களுக்கு வந்தால், எச்சரிக்கையாக இருங்கள்.

தனது கிரிஸ்ஃபிளையர் வாடிக்கையாளர் திட்டத்துடன் தொடர்புடைய ஆண்டுவிழா அதிர்ஷ்டக் குலுக்கல் குறித்து போலி மின்னஞ்சல்கள் பரவி வருவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

அந்த மின்னஞ்சலைப் பெறுபவர்கள், அதில் உள்ள எந்த இணைப்புகளையும் சொடுக்கவோ திறக்கவோ வேண்டாம் என்றும் அதை உடனடியாக நீக்கிவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எஸ்ஐஏவிடமிருந்து வந்ததாகக் கூறும் தூண்டுகளவு (ஃபிஷிங்) மின்னஞ்சல்கள் குறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டது.

“சரிபார்க்கப்படாத தரப்பினருக்கு எந்தவொரு தனிப்பட்ட தரவையும் வெளியிட வேண்டாம்,” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

“எஸ்ஐஏ ஒருபோதும் கடவுச்சொற்கள், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள், கடன்பற்று அட்டை எண்கள், சாதனங்களைத் தொலைவிலிருந்து இயக்குவதற்கான அனுமதி அல்லது பரிசைப் பெறுவதற்கான கட்டணம் ஆகியவற்றைக் கேட்காது,” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு எஸ்ஐஏ வலியுறுத்தியுள்ளது. இந்த மின்னஞ்சல்களுக்குப் பதிலளித்தவர்கள், தங்கள் வங்கிக் கணக்குகளைப் பாதுகாக்கவும் கடவுச்சொற்களை மாற்றவும் தேவைப்பட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எஸ்ஐஏவிடமிருந்து வரும் எந்தவொரு செய்தியின் நம்பகத்தன்மையையும் சரிபார்க்க, தனிநபர்கள் எஸ்ஐஏவின் இணையத்தளத்தில் விளக்கம் கோரலாம்.

Read Entire Article