கிருட்டினகிரி மாவட்ட ப.க.சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா-கருத்தரங்கம்

13 hours ago 14

கிருட்டினகிரி, மே 12- கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் சார்பில்  29/04/2026-புதன்கிழமை மாலை 3.00 மணியளவில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா – கருத்தரங்கம்  கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் அன்னை மணியம்மையார் கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன்    தலைமை வகித்துப் பேசினார்.

மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இர.அஜய்குமார் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சிக்கு  திராவிடர் கழக மாவட்ட தலைவர் கோ. திராவிட மணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.

பகுத்தறிவாளர் கழக  மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் தொடக்க உரையில் புரட்சிக்கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக எடுத்துக் கூறி உரையாற்றினார்.

பாரதிதாசனின் தமிழ் உணர்வு என்ற தலைப்பில் மு.சந்தோஷ்குமார் கருத்துரை வழங்கினார்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழக நிர்வாகி இராம.சகாதேவன்  பெரியா ரும் – பாரதிதாசனும் மற்றும் பாரதிதாச னின் பகுத்தறிவு சிந்தனைகள் என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கி  நிறை வுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்  கி.முருகேசன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மா.சிவசக்தி, கிருட்டினகிரி நகர செயலாளர் அ.கோ.இராஜா, கார்த்திகேயன் உள்பட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னதாக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை யொட்டி அவரது படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அவரது பிறந்தநாளில் பிறந்தநாள் காணும் மாவட்ட தி.க.துணைத் தலைவர் வ.ஆறுமுகத்திற்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாநில ப.க.துணைப்பொதுச்செயலாளர் அண்ணா சரவணனன் ஆகியோர் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்துரை வழங்கிய சந்தோஷ்குமார், கல்லூரி மாணவர் கார்த்திகேயன் ஆகியோருக்கு பெரியார் நூல் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

நிறைவாக  பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் க.வெங்கடேசன் நன்றி கூறினார்.

Read Entire Article