Last Updated:Feb 09, 2026 9:18 PM IST
25 லட்சம் மக்களுக்கு தினசரி 230 முதல் 240 மில்லியன் லிட்டர் வரை விநியோகித்து வருகிறது.

சென்னையின் குடிநீர் அமைப்பின் தொடக்கக் கதையை பேசும்போது கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையம் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய அத்தியாயமாகும். நூற்றாண்டைக் கடந்தும் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, பழைய பொறியியல் திறனை அடிகோடிட்டு நிற்கிறது.
1903ஆம் ஆண்டு பொறியாளர் ஹோர்முஸ்ஜி நவ்ரோஜி நகரின் குழாய் நீர் விநியோக அமைப்பை மறுவடிவமைத்து அடித்தளம் அமைத்தார். பின்னர் ஜேம்ஸ் மேட்லி திட்டங்களை மேம்படுத்தி, 1914ஆம் ஆண்டு ஜெ.எம். மேட்லி வடிவமைப்பில் உருவான கீழ்ப்பாக்கம் நிலையம் சென்னையின் குடிநீர் தேவைக்கு முக்கிய தீர்வாக அமைந்தது.
இந்த நிலையத்தின் ஆரம்ப கட்டமைப்பில் 56 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட எஃகு நீர்த்தொட்டி முக்கிய பங்காற்றியது. நீரை உயரத்திற்கு ஏற்ற கரியால் இயங்கும் நீராவி எல்ஐசி கட்டிடம் வரும் வரை, இது மெட்ராஸ் நகரின் உயரமான கட்டிடமாக அறியப்பட்டது.மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான தினசரி தண்ணீர் அளவு போன்றவை கணக்கிடப்பட்டன.
கீழ்ப்பாக்கம் நீர் திட்டம் செயல்பட்ட பிறகு காலரா போன்ற நீர்வழி நோய்கள் குறைந்து, ஆண்டுக்கு சுமார் 4000 மரணங்கள் குறைந்ததாக ஆய்வுகள் தெரிவித்தன. நகரின் நீர் பொறியாளர்களை கௌரவிக்கும் வகையில் மேட்லி, நவ்ரோஜி ஆகியோரின் பெயர்கள் சாலைகளுக்கும், புழலில் உள்ள நீர் உட்கொள்ளும் கோபுரத்திற்கு ஜோன்ஸ் பெயரும் சூட்டப்பட்டது.
இந்த சுத்திகரிப்பு நிலையம், செங்குன்றம் ஏரியில் இருந்து பெறப்பட்ட நீரை சுத்திகரித்து தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சுமார் 25 லட்சம் மக்களுக்கு தினசரி 230 முதல் 240 மில்லியன் லிட்டர் வரை விநியோகித்து வருகிறது.
நுண்ணிய மணல், கூழாங்கற்கள் மற்றும் செங்கற்களை பயன்படுத்திய பாரம்பரிய சுத்திகரிப்பு முறை 2000ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது; பின்னர் தேவை அதிகரித்ததால் ரசாயன அடிப்படையிலான நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமானது.
இன்று கிருஷ்ணா நதி, வீராணம் ஏரி மற்றும் கடல் நீர்மூலங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கிடைத்தாலும், பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தின் அடித்தளம் அமைந்தது கீழ்ப்பாக்கத்தில்தான் என்பது நகரின் வரலாற்றில் முக்கிய உண்மையாக திகழ்கிறது.

கைக்குழந்தையை கடத்திச் சென்ற ஜோடி... பின்தொடர்ந்து மீட்ட பெற்றோர்...
ராஜஸ்தானில் குழந்தையை கடத்திய ஜோடியை பெற்றோர் காரில் துரத்தி மீட்டனர்
கடத்தலில் ஈடுபட்ட தம்பதி கைது, போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை
குழந்தையை மீட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
.png)







English (US) ·