சோம்நாத், மே 12– எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறிவிட்டு, குஜராத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில், ரோட்ஷோவுக்கு ஏராளமான கார்கள் பயன்படுத்தப்பட்டு ஒத்திகை நடைபெற் றது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்களை தேவைக்கேற்ப மட்டுமே சிக்கன மாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவிலில், அம்ருத் மகோத்சவ நிகழ்ச்சிநேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், அங்கு கார்களின் அணிவகுப்பை நடத்தியுள்ளார். இதற்காக நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் ஏராளமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் எரிபொருளை சிக்கன மாக பயன்படுத்த வேண்டும் என கூறிய பிரதமர் மோடி, ரோட்ஷோ மற்றும் அதற்கான ஒத்திகையை நடத்தியுள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சி மாற்றம் காரணமாக
தாமாக முன்வந்து பதவியை விட்டு விலகும் அரசு வழக்குரைஞர்கள்
சென்னை, மே 12 தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாக கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட அரசு வழக்குைஞர்கள் தங்களது பதவியை தாமாக முன்வந்து பதவி விலகி வருகின்றனர்.
அரசுக்கும், நீதித்துறைக்கும் இணைப்புப் பாலமாக செயல் படவும், அரசு தரப்பில் நீதிமன்றங் களில் ஆஜராகி வாதிடவும் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாக செயல்படவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சட்ட அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம்.
எந்தக் கட்சி ஆட்சியமைக்கிறதோ அக்கட்சியின் வழக்குரைஞர்கள் சட்ட அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்குரைஞர், கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள், மாநில அரசு ப்ளீடர், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர், சிறப்பு அரசு வழக்குரைஞர்கள், கூடுதல் அரசு வழக்குரைஞர்கள் மற்றும் சிவி்ல், கிரிமினல் துறைகளுக்கான அரசு வழக்குரைஞர்கள் என 100-க்கும் மேற்பட்ட பதவிகளை பிடிக்க சென்னையிலும், மதுரையிலும் வழக்குரைஞர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும்.
தற்போது த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில் கடந்த திமுக ஆட்சியில் சட்ட அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களது பதவியை ஒருவர் பின் ஒருவராக தாமாக முன்வந்து பதவி விலகி வருகின்றனர்.
அதன்படி, அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டிருந்த ஜெ.ரவீந்திரன், பி.முத்துக்குமார் மற்றும் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட அசன் முகமது ஜின்னா ஆகியோர் தாமாக முன்வந்து தங்களது பதவியை விட்டு விலகியுள்ளனர்.
இவர்கள் தமிழ்நாடு அரசுக்கு தனித்தனியாக அனுப்பியுள்ள கடிதங்களில் கடந்த 5 ஆண்டுகளாக தங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசின் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
.png)
14 hours ago
14





English (US) ·