Last Updated:Feb 08, 2026 9:54 PM IST
TNPSC | அரும்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று மாநிலம் முழுவதும் குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
தேர்வு மையக் குளறுபடி காரணமாக, தமிழ்நாட்டில் நடைபெறவிருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், TNPSC கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்வு மையக் குளறுபடி காரணமாக, தமிழ்நாட்டில் நடைபெறவிருந்த Group 2A முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட குரூப் 2 பணிகளுக்கும், வணிகவரி உதவியாளர் உள்ளிட்ட குரூப் 2 ஏ பணிகளுக்கும் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதில், தேர்வானவர்களுக்கான குரூப் 2ஏ பதவிகளுக்குரிய முதன்மை தேர்வுகள் ஞாயிறன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரி தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்ற பலரின் பதிவு எண், அந்த மையத்தில் இல்லாததால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேநேரத்தில், நந்தனம் மாநிலக் கல்லூரியில் 821 பேர் தேர்வெழுத இருந்த நிலையில், ஒற்றை இலக்கில் மட்டுமே தேர்வர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில், அரும்பாக்கத்தில் தேர்வு எழுதச் சென்றோர், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அரும்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று மாநிலம் முழுவதும் குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். வரும் 22 ஆம் தேதி குரூப் 2 பதவிகளுக்கான பாடத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வெங்கடப்பிரியா ஐஏஎஸ் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த அதிரடி நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
Location :
Chennai [Madras],Chennai,Tamil Nadu
.png)





English (US) ·