அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு என்பது அணு உலைகளின் கணினி அமைப்புகளை மட்டும் பாதுகாப்பது அல்ல. அவற்றுடன் தொடர்புடைய ஒப்பந்த நிறுவனங்களின் கணினி அமைப்புகளும் அதிக அளவில் பாதுகாக்கப்பட வேண்டும்
Published:Just NowUpdated:Just Now

நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே)
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.
(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு வலையமைப்புகள் அல்லது தரவுகளை சட்டவிரோதமாக சேதப்படுத்துதல் அல்லது திருடுதல் எனலாம்).
அணுமின் நிலைய சைபர் தாக்குதல் செய்தி வெளியானதும் பொதுமக்கள் பலரது மனதில் முதன்முதலில் எழுந்த பெரும் அச்சம் என்பது அணுமின் நிலையம் பாதிக்கப்பட்டுள்ளதோ என்பதும் அதனால் பெரும் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டு விடுமோ என்பதும்தான்.
ஆனால் அணுமின் நிலையத்தின் அணு உலைக் கட்டுப்பாடு அமைப்புகள் ஹேக் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறது இந்திய அணுசக்திக் கழகம்.

சைபர் அட்டாக்
அதாவது அணு உலைகளின் கட்டுப்பாட்டு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை. மின் உற்பத்தி வழக்கம் போலத் தொடர்கிறது. ஏனென்றால் ஹாக் செய்யப்பட்ட தகவல்கள் அணு உலை இயக்கம் அல்லது பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பானவையல்ல.
அவை Balance of Plant எனப்படும் துணை உள்கட்டமைப்புகள் தொடர்பானவை என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே).
அணு மின் நிலையங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு பல திகிலூட்டும் காரணங்கள் உண்டு.
அணு மின் நிலைய சைபர் தாக்குதல்கள்
தேசிய மின் உற்பத்தி பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இதற்குப் பின்னணியாக இருக்கலாம். உளவு நடவடிக்கைகளுக்காக இது நடைபெறலாம். முக்கியமான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் தகவல்களை திருடுவது இதன் நோக்கமாக இருக்க வாய்ப்பு உண்டு. அரசியல் அல்லது ராணுவ அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக சைபர் தாக்குதல் நடக்கலாம். அல்லது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது என்பதும் அதன் கூடுதல் இலக்காக இருக்கலாம்.
அணு மின் நிலைய சைபர் தாக்குதல் என்பது புதுமுயற்சி அல்ல. ஈரானின் நட்டான்ஸ் யுரேனிய செறிவூட்டும் நிலையத்தை இலக்காக கொண்டு 2010ல் ஒரு சைபர் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதல் அங்குள்ள தொழில்துறை கட்டுப்பாட்டு அமைப்புகளில் ஊடுருவியது. அங்குள்ள சென்ட்ரிஃப்யூஜ்கள் சிலவற்றை இந்தத் தாக்குதல் சேதப்படுத்தியது.

`கூடங்குளம் ஃபைல்ஸ்!’
2022ல் ரஷ்யா உக்ரைன் போரின்போது ரஷ்யாவில் உள்ள செர்னோபில் அணுநிலைய அமைப்புகள்மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு கதிர்வீச்சு கண்காணிப்பில் தற்காலிக சிக்கல்கள் ஏற்பட்டன. 2017ல் அமெரிக்காவில் எரிசக்தி துறையுடன் தொடர்புடைய சில அணு நிலையங்களை குறிவைத்து ஹேக்கிங் முயற்சிகள் நடைபெற்றன.
இந்தியாவில் இதே கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முன்பு ஒருமுறையும் சைபர் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டது. 2019ல் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் நிர்வாக வேலை அமைப்பில் தீங்கிழைக்கும் மென்பொருள் (மால்வேர்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மாதம் நடைபெற்ற சைபர் தாக்குதலில் ஒப்பந்த நிறுவனத்தின் சேவையகத்தில் தரவுகளுக்கு கசிவு ஏற்பட்டது. இதனால் அணுமின் நிலைய திட்டம் தொடர்பான பல ஆவணங்கள் கசிந்து வெளியாகிவிட்டன என்று கூறப்பட்டது.
சமீபத்திய சைபர் தாக்குதல் நமக்கு அளிக்கும் பாடங்கள் இவை.
அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு என்பது அணு உலைகளின் கணினி அமைப்புகளை மட்டும் பாதுகாப்பது அல்ல. அவற்றுடன் தொடர்புடைய ஒப்பந்த நிறுவனங்களின் கணினி அமைப்புகளும் அதிக அளவில் பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால் இவற்றின் மூலம் அணு மின் நிலையத்தின் உள் கட்டமைப்பு விவரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்கள் கசிய வாய்ப்பு உண்டு.
பெரிய விபத்துகள் நடக்காததற்கு காரணம் நிர்வாக வலை அமைப்பும் அணு உலை கட்டுப்பாட்டு வலை அமைப்பும் ஒன்றிலிருந்து தனிமைப்பட்டிருப்பதுதான். தவிர அவற்றின் பல்லடுக்கு பாதுகாப்பும் குறிப்பிடத்தக்க ஒன்று. இதன் காரணமாக சைபர் தாக்குதல் மூலமாக நேரடியாக அணு உலையைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல.
இதுவரை சைபர் தாக்குதல்கள் காரணமாக பெரிய அளவிலான அணு விபத்து எதுவும் நடந்துவிடவில்லை என்பது ஆறுதல் அளித்தாலும், இவை தேசிய பாதுகாப்பு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு பாதுகாப்பிற்கு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு கடுமையான அச்சுறுத்தலாகவே கருதப்படுகின்றன.

'கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல்'
சைபர் தாக்குதல் மூலம் பெறப்படும் தகவல்கள் எதிர்கால தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படலாம். அணுமின் நிலையங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கண்காணிப்பு கருவிகளில் தரவுகள் மாற்றப்பட்டால் பொறியாளர்கள் தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். சைபர் தாக்குதல் கட்டுப்பாட்டு அமைப்புகளை எட்டினால் ஒரு சில அணு உலைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை உண்டாகலாம்.
இதனால் மின் உற்பத்தி குறைய வாய்ப்பு உண்டு. சைபர் தாக்குதலுக்குப் பிறகு கணினி அமைப்புகளை மீட்டெடுப்பது, விசாரணை நடத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு பெரும் தொகை தேவைப்படும். எனவே அரசுக்கு நிதிச்சுமை அதிகமாகும்.
தவிர அணு மின் நிலையங்கள் ஒரு நாட்டின் முக்கியமான தேசிய கட்டமைப்பு. இவையும் சைபர் தாக்குதலுக்கு இலக்தாகலாம் என்பது நிச்சயம் எளிதில் கடக்கக்கூடிய செய்தி அல்ல.!
.png)






English (US) ·