Last Updated:May 18, 2026 8:52 AM IST
K Rajan Death | திரைப்பட தயாரிப்பாளரான கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கே.ராஜன் தற்கொலை விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

85 வயதிலும் சினிமாவில் தீவிர ஈடுபாட்டுடன் இயங்கி வந்த இவர் திடீரென உயிரை மாய்த்துக் கொண்டதாக வெளியான தகவலால் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. முன்னதாக ஞாயிறு காலை வண்ணாரப்பேட்டையில் இருந்து தனது காரில் ஓட்டுநருடன் கிளம்பிய அவர், கார் அடையாறு ஆற்றங்கரை அருகே வரும்போது நிறுத்துமாறு கூறியிருக்கிறார்.
சிறிது நேரம் நடைபயிற்சி செய்வதாக கூறிவிட்டு சென்றவர் திடீரென பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை அடையாறு ஆற்றில் முதியவர் ஒருவர் குதித்து விட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்டு விசாரித்த போதுதான் அவர் பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் என்பது தெரியவந்து உறுதி செய்யப்பட்டது.
அவரது உடல் உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறுதியாக கே. ராஜன் தனது கார் ஓட்டுநருடன் சென்றதால், அவரிடம் ஏதேனும் பேசினாரா? மன வருத்தத்தில் இருந்தாரா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களாகவே அவர் எந்தவொரு சினிமா நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த சில காலமாக தனது குடும்பத்துடன் பெரிதாக தொடர்பில்லாமல் தனியாக வசித்து வந்த கே. ராஜன் திடீரென விபரீத முடிவை எடுத்தது ஏன் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், போலீஸ் விசாரணையில் சில தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்படி, 15 கோடி ரூபாய் வரை கடன் பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சலால் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
கே.ராஜனுக்கு 15 கோடி ரூபாய் வரை கடன் இருந்ததாகவும், இதனால் குடும்பத்தில் இருந்து பிரிந்து கடந்த சில மாதங்களாகவே ஹோட்டலில் தனியாக தங்கி இருந்துள்ளார். கடன் பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சலால் நேற்று அடையாறு கூவம் ஆற்று பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இன்று ராஜன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
85 வயதிலும் தீவிரமாக சினிமா துறையில் இயங்கி வந்த தயாரிப்பாளர் கே. ராஜன், இசைவெளியீட்டு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ் சினிமா சந்திக்கும் சவால்கள் குறித்து அதிரடியாக பேசுவதன் மூலம் பலராலும் அறியப்பட்டவர். தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள், நடிகர்களின் அதிகப்படியான சம்பளம் மற்றும் திரையுலகில் நிலவும் முறைகேடுகள் குறித்து எந்தவித ஒளிவுமறைவும், சமரசமும் இன்றி உடைத்துப் பேசி செய்திகளில் இடம்பிடித்து வந்தவர் கே.ராஜன்.
85 வயதான மூத்த ஆளுமை ஒருவர் இத்தகைய துயரமான முடிவை தேடிக்கொண்டது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும், சோக அலையையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்குத் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

"பயங்கரவாதிகளை தூண்டினால்.." - இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை!
பயங்கரவாதிகளை தூண்டினால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இல்லாமல் போகலாம்.
பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தால் இந்திய ராணுவம் பதிலடி.
2023 மே 7 பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆபரேசன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி.
.png)







English (US) ·