கேன்வாஸ் கற்றல் தளத்திலிருந்து சில விவரங்கள் கசிந்ததால் உள்ளூர் கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன, - கோப்புப் படம்: லியான்ஹ சாவ்பாவ்
கேன்வாஸ் கற்றல் தளத்திலிருந்து முக்கிய விவரங்கள் இதுவரை கசிந்தாகத் தெரியவில்லை என்று சனிக்கிழமை அன்று (மே 16) கல்வி அமைச்சு தெரிவித்தது.
மே 14ஆம் தேதி நிலவரப்படி தரவுகள் கசிந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை என்றும் அது கூறியது.
இணையத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட, அரசாங்க ஆதரவு பெற்றுள்ள உயர்கல்வி நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவற்றுக்குத் தேவையான சாத்தியமுள்ள ஆதரவுகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்தது.
தனியார் கல்வி நிறுவனங்கள் சட்ட, தரவுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அது வலியுறுத்தியது.
மே 7ஆம் தேதி நிகழ்ந்த இணையத் தாக்குதலில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் (எஸ்ஐஎம்) உள்ளிட்ட உள்ளூர் கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலில் பெயர், மின்னஞ்சல் போன்ற சில விவரங்கள் கசிந்திருக்கலாம் என்று மே 8ஆம் தேதி மாணவர்களுக்கு என்யுஎஸ் தெரியப்படுத்தியது.
சிங்கப்பூர் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாமல் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உட்பட ஆயிரக்கணக்கான அனைத்துலகக் கல்வி நிறுவனங்களும் தரவுக் கசிவால் பாதிக்கப்பட்டன.
சிங்கப்பூரில் சிங்கப்பூர் காலேஜ் ஆஃப் இன்சூரன்ஸ், என்டியுசி லேர்னிங் ஹப், த லேர்னிங் லேப் ஆகியவையும் குறி வைக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்று இருந்தன.
கேன்வாஸ் கற்றல் தளத்திற்குள் நுழைவதைத் தடுத்த இந்த இணையத் தாக்குதலுக்கு 2019 முதல் செயல்பட்டு வரும் இணையம்வழி மிரட்டல் விடுக்கும் ‘ஷைனிஹண்டர்ஸ்’ பொறுப்பு ஏற்றுக் கொண்டது.
.png)








English (US) ·