தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாதம் ஒன்றில் ராகுல் காந்தி வெளி நாடு பயணம் குறித்து விமர்சித்தார் பாஜக செய்தித் தொடர்பாளர்.
அதற்குக் காங்கிரஸ் சார்பில் பேசியவர் பிரதமர் பயணம் குறித்து கேள்வி எழுப்பியபோது –
இது ஏற்ெகனவே முடிவு செய்யப்பட்ட பயணம் என்றார் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்.
அதாவது கடந்த ஆண்டு ஏசியன் மாநாட்டில் அமெரிக்காவின் மறைமுக மிரட்டல் காரணமாக பிரதமர் பங்கேற்கவில்லை.
அதற்குப் பதிலாக வேறு ஒரு நாள் வருவதாகக் கூறியிருந்தாராம்; ஆகையால் தற்போது பிரதமர் மலேசியப் பயணம் சென்றுள்ளார் என்று கூறினார். எல்லாம் சரி, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மட்டும் ஏன் இவர் பயண தேதியை முடிவு செய்கிறார்? என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது.
இப்போது, 2026ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மலேசியா சென்றது போல் தான், பிரதமராக பதவி ஏற்ற பிறகு 2014 ஆம் ஆண்டு முதல் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பிரேசில் சென்றார். அப்போது பிரதமர் செல்லவேண்டிய அவசியம் இல்லை; வெளியுறவு துறை செயலாளர் சென்றாலே போதும் என்று பேசப்பட்ட நிலையிலும் அவர் பிரேசில் சென்றார்.
அதேபோல், 2023 ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது இந்தோனேசியா சென்றுவிட்டார். 2023 நவம்பர் இறுதியில் குளிர்காலக் கூட்டத் தொடரின் போது துபாய் சென்றார்.
நவம்பர் 2025 நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்துகொண்டு இருந்தபோது தென்னாப்பிரிக்கா சென்றார்.
டிசம்பர் 2025 ஆம் ஆண்டு குளிர்காலக் கூட்டத் தொடரின் போது ஜோர்தான் எத்தியோப்பியா ஓமன் நாடுகளுக்குச்சென்றார். பூட்டானுக்கும் குளிர்காலக் கூட்டத் தொடர் சமயத்தில்தான் பயணம் செய்தார்.
மோடியின் பெரும்பாலான வெளிநாட்டுப் பயணங்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போதுதான் அமைந்துள்ளன.
நாட்டில் இருக்கும் போதோ, கோயில் கோயிலாக சென்று வருகிறார். ஒரே ‘வந்தேபாரத் ரயிலை’ ஆண்டு முழுவதும் பல்வேறு நகரங்களுக்குச் சென்று கொடி அசைத்துத் துவக்கி வைக்கிறார். இந்தப்பணி ரயில்வே நிலைய மேலாளரின் பணி ஆகும்.
ஞாயிறுக்கிழமைகளில் பள்ளிச்சீருடையோடு மாணவர்களை வரவழைத்து, ரயிலில் பயணம் செய்து போட்டோ அனுப்புவது, தேர்தல் காலங்களில் மட்டும் தேர்தல் நடக்கும் மாநிலத்திற்குத் தொடர்ந்து சென்று, அந்த அந்த மாநிலத்திற்கு ஏற்பப் பேசுவது, அதுவும் இல்லை என்றால் மயிலுக்கும், மாட்டிற்கும், வாத்துக்கும் தீனி போட்டு, படமாக்கி, வெளியிடுவது தான் அவர் இந்தியாவில் இருக்கும் போது செய்யும் வேலை ஆகும்.
காங்கிரஸ்காரர் பிரதமர் மோடி குறித்து எழுப்பிய கேள்விகளும், கூறிய தகவல்களும் மிகவும் முக்கியமானவையே!
நாடாளுமன்றம் நடக்கும்போது டில்லியில் இருந்தால்கூட அவைக்கு வருவதில்லை. உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எந்தக் கால கட்டத்திலும் பதில் சொன்னார் இல்லை. அவையில் இருந்தால்தானே பதில் சொல்ல முடியும்? ஒருக்கால் அவைக்குச் சென்றால் பதில் சொல்ல வேண்டியிருக்குமே என்ற அச்சமும்கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
மற்றொரு முக்கியமான தகவல்: செய்தியாளர்கள் சந்திப்பு என்றால் என்னவென்றே பிரதமருக்குத் தெரியாது!
ஒரு முறை சி.என்.என்.அய்.பி.என். தொலைக்காட்சி சார்பில் பிரபல ஊடகவியலாளரான கரன் தாப்பருடன் பேட்டியில் அமர்ந்த குஜராத் முதல் அமைச்சராகவிருந்த நரேந்திர மோடி நான்கரை நிமிடங்கள் தான் தாக்குப் பிடிக்க முடிந்தது – அதற்குப்பின் உடனே நடையைக் கட்டினார் (22.10.2007) (Devil’s Advocate நிகழ்ச்சி).
இந்த நிலையில் உள்ளவர்தான் மோடி என்பதைத் தெரிந்து கொண்டால், 56 அங்குல மார்புள்ளவராக ‘வீர தீர’ வார்த்தைகளைக் ெகாட்டுவது எல்லாம் வீண் ஜம்பம் தான் என்பது புரியும். இன்றைய கால கட்டம் என்பது ஜனநாயகத்தின் ஆணி வேருக்கே ஆபத்தான காலம் – மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் – எச்சரிக்கை! எச்சரிக்கை!!
.png)
1 hour ago
18




English (US) ·