15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன் அபிஷேக்குடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்தார். இன்னும் சிறிது நேரம் களத்தில் இருந்திருந்தால் பெரிய இன்னிங்ஸ் ஆடியிருக்கலாம்.
1 Min read
Published : Feb 26 2026, 08:10 PM IST
14

Image Credit : Getty
இந்தியா vs ஜிம்பாப்வே போட்டி
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 போட்டியில், இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியை பொறுத்தவரை 2 மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய அணியில் இருந்து ஃபினிஷர் ரிங்கு சிங் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டனர். சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. அக்சர் படேல் மீண்டும் உள்ளே வந்தார்.
24
Image Credit : X
சஞ்சு சாம்சன் அதிரடி தொடக்கம்
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடியது. அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் சிக்சரும், பவுண்டரியுமாக நொறுக்கினார். 15 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். பிளெஸ்ஸிங் முசரபானி வீசிய ஓவரில் மெதுவான பந்தை கணிக்கத் தவறி சிக்ஸர் அடிக்க முயன்ற சஞ்சு சாம்சன் டீப் மிட்விக்கெட்டில் ரியான் பர்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
34
Image Credit : Getty
சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்
15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன் அபிஷேக்குடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்தார். இன்னும் சிறிது நேரம் களத்தில் இருந்திருந்தால், ஒரு சிறந்த இன்னிங்ஸை கட்டமைத்து, தொடக்க வீரர் இடத்தை உறுதி செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கும். ஏற்கெனவே நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் நல்ல தொடக்கம் கொடுத்து வெளியேறி இருந்தார் சஞ்சு சாம்சன். அவர் இந்த போட்டியில் அசத்துவார் என்று சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சஞ்சு சாம்சன் அனைவருக்கும் ஏமாற்றம் அளித்தார்.
44
Image Credit : Getty
அபிஷேக் சர்மா அதிரடியில் கலக்கல்
அதே வேளையில் இந்த போட்டியின் மூலம் பார்முக்கு திரும்பிய அபிஷேக் சர்மா அதிரடியில் வெளுத்துக் கட்டினார். தனது வழக்கமான டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் பவுண்டரியும், சிக்சர்களுமாக நொறுக்கிய அபிஷேக் சர்மா வெறும் 26 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இதுவரை 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் விளாசியுள்ள அவர் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார்.
.png)
2 hours ago
13








English (US) ·