Last Updated:Feb 10, 2026 1:55 PM IST
சுமார் ₹5 கோடி மதிப்பிலான இந்த வாகனம், துப்பாக்கித் தோட்டாக்களையும் தாங்கும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் ‘மான்செஸ்டர்’ என அழைக்கப்படும் கோயம்புத்தூர், எப்போதும் உயர்தர மற்றும் சொகுசு வாகனங்களின் மையமாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் கோவை மாநகர சாலைகளில் வலம் வந்த ஒரு வாகனம், பொதுமக்களும் கார் பிரியர்களும் ஆச்சரியத்தில் உறைந்து போகும் வகையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன தயாரிப்பான ‘சைபர் டிரக்’ (Tesla Cybertruck), கோவையின் முக்கிய சாலைகளில் முதன்முறையாக காணப்பட்டது. விண்வெளி ஓடம் போன்ற அதன் வித்தியாசமான வடிவமைப்பும், துருப்பிடிக்காத இரும்பு கவசத்தால் (Stainless Steel Exoskeleton) ஆன உடலமைப்பும், ஹாலிவுட் திரைப்படக் கருவி ஒன்று சாலைக்கு வந்ததுபோன்ற ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவில் முறையாகப் பதிவு செய்யப்பட்ட இந்த மின்சார வாகனம், சமீப காலமாக சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் தென்பட்டு வந்த நிலையில், தற்போது கோவைக்கும் வந்துள்ளது. சுமார் ₹5 கோடி மதிப்பிலான இந்த வாகனம், துப்பாக்கித் தோட்டாக்களையும் தாங்கும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதையும் வாசிக்க: பார்சல் சேவையில் வரும் அதிரடி மாற்றம்... இந்திய ரயில்வே புதிய ஏற்பாடுகள்
கோவையின் அவினாசி சாலை மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் இந்த வாகனம் தென்பட்டதை அடுத்து, கார் பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் தங்கள் செல்போன்களில் வீடியோ, புகைப்படங்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர். ஒருபுறம் இதன் விலை மற்றும் இறக்குமதி வரி குறித்து விவாதங்கள் எழுந்தாலும், மறுபுறம் அதன் ‘மாஸ்’ தோற்றம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இந்தியாவில் மிகவும் அரிதாகவே காணப்படும் டெஸ்லா சைபர் டிரக், கோயம்புத்தூர் போன்ற தொழில் நகரத்தின் சாலைகளில் வலம் வருவது, நகரத்தின் சர்வதேச அடையாளத்தை மேலும் உயர்த்திக் காட்டுவதாக இளைஞர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
.png)




English (US) ·