சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க விதிமுறைகள் என்ன? வாக்கெடுப்பு தோல்வி அடைந்தால் என்ன நடக்கும்?

12 hours ago 14

Last Updated:May 12, 2026 4:37 PM IST

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தனிப்பெரும் கட்சி அல்லது கூட்டணிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்து, ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவார்.

தமிழக சட்டமன்றத்தில் ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க அல்லது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க, அவை நடவடிக்கையில் கலந்து கொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சரிபாதிக்கும் மேல், அதாவது குறைந்தபட்சம் 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தனிப்பெரும் கட்சி அல்லது கூட்டணிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்து, ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவார்.

முதலமைச்சர் அல்லது ஆளுநரால் நியமிக்கப்பட்டவர், தனது ஆட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்க "நம்பிக்கை தீர்மானத்தை" (Motion of Confidence) சபையில் கொண்டு வருவார். சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு (Voice Vote) மூலமாகவோ, அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை எண்ணுவதன் மூலமாகவோ (Division of Votes) வாக்கெடுப்பு நடத்தலாம்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 174-ன் படி, ஆளுநர் ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைக்கலாம்.

தற்போதைய நிலவரப்படி தவெகவிற்கு சட்டமன்றத்தில் 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதில் திருப்பத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி  நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் அதிமுகவில் தற்போது உள்ள உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு அளிப்பார்கள் சிவி சண்முகம் தெரிவித்து இருந்தார். இதனால் சட்டமன்றத்தில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது.

Location :

Chennai,Tamil Nadu

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க விதிமுறைகள் என்ன? வாக்கெடுப்பு தோல்வி அடைந்தால் என்ன நடக்கும்?

Read Entire Article