“சனாதனம்; மக்களைப் பிரிக்கிறதை ஒழிக்க வேண்டும்” – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

1 hour ago 8

Last Updated:May 14, 2026 10:05 PM IST

"சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல" என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்)
உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்)

தனிப் பெரும்பான்மை இல்லாத தவெக, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதனைத் தொடர்ந்து நேற்று சட்டமன்றத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது.

இதற்காக நேற்று கூடிய சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு விஷயங்களை பேசிவிட்டு, “மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” எனப் பேசினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கடந்த முறை அமைச்சராக இருந்தபோதே, “டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்க வேண்டும். அந்த வகையில் சனாதனத்தை எதிர்ப்பதைவிட ஒழிப்பதே சரி” எனப் பேசியிருந்தார். அப்போதும் இதற்கு கண்டனங்கள் எழுந்து நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” எனப் பேசியது பெரும் விவாதமாகியுள்ள நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் பேசினப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம்.


தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.

இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன…


— Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) May 14, 2026

அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.

பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கையை தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி” எனத் தெரிவித்துள்ளார்.

First Published :

May 14, 2026 10:05 PM IST

Read Entire Article