Last Updated:October 13, 2025 12:26 PM IST
PMK Founder Ramadas | கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த பாலத்துக்கு ஜி.டி. நாயுடு என்று பெயர் சூட்டியது, தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு முரண்பாட்டை ஏற்படுத்தி உள்ளதாகவும் ராம்தாஸ் கூறியுள்ளார்.
சமூக, சாதிய அடையாளப் பெயர்களை மாற்றுவதில் தமிழ்நாடு அரசு அவசரம் காட்டக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல காலமாக ஊர்கள், சாலைகள், தெருக்கள், நீர்நிலைகளுக்கு சாதி அடையாளப் பெயர்கள் வைக்கும் நடைமுறை உள்ளதாக கூறியுள்ளார்.
இந்தப் பெயர்களை நீக்குவதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை, பல சமூக மக்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை, சமூக ஒற்றுமைக்கும், பல ஆண்டு கால கலாச்சார நடைமுறைக்கும் எதிராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது, முன்னோர்கள் செய்த தியாகங்களை சீர்குலைத்து அவர்கள் நினைவுகளை மறைக்க வழி செய்வது போல் உள்ளதாகவும் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த பாலத்துக்கு ஜி.டி. நாயுடு என்று பெயர் சூட்டியது, தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு முரண்பாட்டை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
காலங்காலமாக இருக்கின்ற அடையாளங்களை நீக்குவது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தையும், முரண்பாடுகளையுமே ஏற்படுத்தும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
First Published :
October 13, 2025 12:26 PM IST