Last Updated:May 10, 2026 6:21 PM IST
விஜய்யின் கட்சியின் பெயரான 'தமிழக வெற்றிக் கழகம்' என்பதைத் மிகச் சரியாக உச்சரித்து அவர் வாழ்த்துத் தெரிவித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய், இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத அர்லேகர் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த தருணத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், ஆப்பிரிக்காவின் தான்சானியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஊடகக் கலைஞர் கிலி பால் (Kili Paul) தெரிவித்துள்ள வாழ்த்து தனி கவனம் பெற்றுள்ளது. இந்தியத் திரைப்படப் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு 'லிப்-சிங்க்' (Lip-sync) செய்வதன் மூலம் 11 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ள கிலி பால், விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வைரலாகி வரும் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் கிலி பால் "இளையதளபதி சார், நீங்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் மென்மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும். நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன்." என்று கூறியுள்ளார்
குறிப்பாக, விஜய்யின் கட்சியின் பெயரான 'தமிழக வெற்றிக் கழகம்' என்பதைத் மிகச் சரியாக உச்சரித்து அவர் வாழ்த்துத் தெரிவித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு கிலி பால் ஆடிய வீடியோக்கள் இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
விஜய் தலைமையிலான TVK கட்சி, 234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் 107 இடங்களைக் கைப்பற்றி, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. 60 ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் நீடித்து வந்த திமுக-அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து விஜய் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். கிலி பால் போன்ற சர்வதேசக் கலைஞர்களின் வாழ்த்துகள், விஜய்யின் வெற்றி உலகளவில் கவனிக்கப்படுவதை தெரியப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
சினிமா முதல் அரசியல் வரை.. உலக நாடுகளிலிருந்து குவியும் வாழ்த்து மழையில் நனையும் தமிழக முதல்வர்..
.png)








English (US) ·