Last Updated:Feb 22, 2026 7:17 PM IST
பிரேம்குமார் இயக்கத்தில் உருவான மெய்யழகன் படத்திற்கும் 4 விருதுகள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்திற்கு சிறந்த நடிகர், இயக்குனர் என மொத்தம் 8 பிலிம் பேர் விருதுகள் கிடைத்துள்ளன.
அமரன் திரைப்படமானது மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு, ரசிகர்களின் மனதை வென்றது மட்டுமல்லாமல், விமர்சன ரீதியாகவும் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது.
இந்த நிலையில், கொச்சியில் நடைபெற்ற 70-வது பிலிம்ஃபேர் விருது விழாவில், இப்படம் மொத்தம் 8 முக்கிய விருதுகளை அள்ளிச் சென்றது. குறிப்பாக, சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், மேஜர் முகுந்தாகத் தத்ரூபமாக நடித்த சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றனர்.
அதேபோல், அவரது மனைவி இந்துவாக உணர்ச்சிகரமாக நடித்த சாய் பல்லவி சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்று அசத்தினார். இப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி சிறந்த இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தொழில்நுட்ப ரீதியாகவும் அமரன் ஆதிக்கம் செலுத்தியது; ஜி.வி. பிரகாஷின் இசையில் வெளியான பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக சிறந்த இசை ஆல்பம் விருது வழங்கப்பட்டது. மேலும், சிறந்த ஒளிப்பதிவாளர் (சி.எச். சாய்), சிறந்த பின்னணி பாடகர் (ஹரிச்சரண் - 'ஹே மின்னலே'), மற்றும் சிறந்த பின்னணி பாடகி (சுவேதா மோகன் - 'ஹே மின்னலே') என அனைத்து முக்கியத் துறைகளிலும் அமரன் தனது முத்திரையைப் பதித்துள்ளது.
.png)






English (US) ·