சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

3 hours ago 7

185b2831-1d47-4930-bde4-a1e1938ec695

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அண்மையில், இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக, பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், விமானங்கள் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன.

அதேநேரத்தில் சோதனையில் அது புரளி எனத் தெரிய வருகிறது.

அந்த வகையில் தமிழகத்திலும் நீதிமன்றங்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் நாள்தோறும் வந்த வண்ணம் இருக்கின்றன.

சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு மின்னஞ்சல் மூலமாகச் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

சீமான் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் காவல்துறை, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் அது புரளி எனத் தெரிய வந்தது.

Read Entire Article