எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிருப்தி தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Published:6 mins agoUpdated:6 mins ago

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பெரும்பான்மையை நிரூபித்த த.வெ.க ஆட்சியை நடத்தி வருகிறது. இரண்டாம் இடம் பிடித்த தி.மு.க எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அ.தி.மு.க - வில் பெரும் களேபரமே நடந்துக் கொண்டிருக்கிறது.
த.வெ.க ஆதரவு மற்றும் எதிர்ப்பு விவகாரத்தில் இரண்டாகப் பிளவுபட்டு வரும் அ.தி.மு.க - வில் பெரும் கலவரமே நடந்துக் கொண்டிருக்கிறது. எஸ்.பி. வேலுமணி அணியா, எடப்பாடி பழனிசாமி அணியா எனும் அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிருப்தி தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான போஸ்டர்
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். `தேர்தலில் தொடர்ந்து நான்கு முறை தோல்வியைக் கண்ட பழனிசாமி உடனடியாக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லா விட்டால் ' என எச்சரிக்கும் தொணியில் சேலம் மாவட்டத்தின் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சுந்தரம் கன்னங்குறிச்சி என்கிற பெயரில் ஒட்டுப்பட்டுள்ள இந்த போஸ்டர் விவகாரம் அவரின் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.!
.png)







English (US) ·