'ஜன நாயகன்' பட வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு - அடுத்து என்ன நடக்கும்? | Jana Nayagan

1 hour ago 18

Last Updated:Feb 10, 2026 10:48 AM IST

Jana Nayagan | நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' படம் ரிலீஸ் தொடர்பான வழக்கில் மனுவை தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்றதையடுத்து நீதிபதி முக்கிய உத்தரவை பிறப்பித்தார்.

 நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில், படம் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி, தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க ஆணையிட்டார்.

 இதை எதிர்த்து தணிக்கை வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததோடு வழக்கை மீண்டும் முதலில் இருந்து தனி நீதிபதி பி.டி.ஆஷா விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பியதை எதிர்த்து, திருத்த மனு தாக்கல் செய்யவும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது.

 இந்நிலையில், தணிக்கைச் சான்று தொடர்பாக மறு ஆய்வு குழுவை ஜனநாயகன் படக்குழு அணுகி உள்ளது. இதையடுத்து, தனி நீதிபதி முன் உள்ள வழக்கை திரும்பப் பெற உள்ளதாக கூறி, பட தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்ற பதிவு துறைக்கு கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில், வழக்கு தனி நீதிபதி முன்பு, வாபஸ் பெறுவதற்காக என்ற தலைப்பில், பட்டியலிடப்பட்டுள்ளது. இது இன்று காலை முதல் வழக்காக விசாரிக்கப்பட்டது.

 வழக்கு, நீதிபதி ஆஷா முன் விசாரணைக்கு வந்த போது, வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டார். வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 இதற்கிடையே, தற்போது ஜன நாயகன் திரைப்படம் தணிக்கை மறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மறு ஆய்வுக்குழு புதிதாக அமைக்கப்பட்டு படத்தை பார்ப்பார்கள்.

 மறு ஆய்வுக்குழு 20 நாட்களில் படத்தை பார்த்து ஆலோசித்து திருத்தங்களை சொன்னபின் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட வாய்ப்புள்ளது. சான்று கிடைக்கும் பட்சத்தில் மார்ச் முதல் வாரத்தில் ஜன நாயகன் படம் வெளியாகலாம். எது எப்படியோ இன்னும் 10 நாட்களில் ஜன நாயகன் ரிலீஸ் குறித்து தெரிந்துவிடும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு... உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா பாருங்க !

  • ஆர்.காவனூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக பிப்ரவரி 11-ம் தேதி மின்தடை அறிவிப்பு

  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொருவளூர், வயலூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்

  • மின்சாரம் தொடர்பான சேவைகளுக்கு TNPDCL செயலியை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article