ஜிடி நாயுடு பாலத்தின் அருகே கோர விபத்து.. 3 பேர் பலி..!

23 hours ago 1

Last Updated:October 13, 2025 11:36 AM IST

Coimbatore death | கோவை GD நாயுடு பாலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

லாரி - கார் விபத்து
லாரி - கார் விபத்து

கோவையில் புதிதாக கட்டப்பட்ட ஜிடி நாயுடு பாலத்தின் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட பாலம் சில தினங்களுக்கு முன்னால் திறக்கப்பட்டது. இந்த பகுதிகளை கடக்க இதுவரை 45 நிமிடம் வரை ஆன நிலையில்,தற்போது இந்த மேம்பாலம் உதவியால் பத்து நிமிடங்களில் இந்த சாலையை கடக்க முடிகின்றது. இந்த புதிய பாலத்தை வாகன ஓட்டிகள் உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட்வின்ஸ் பகுதிக்கு GD மேம்பாலத்தில் சென்ற கார், பாலத்தில் இருந்து வேகமாக இறங்கிய போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் விபத்துக்குள்ளான காரில் இருந்த இருகூரை சேர்ந்த சேக் உசேன் மற்றும் அவருடன் பயணித்த பெண், ஒரு இளைஞர் என மொத்தம் மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தில், கார் அப்பளமாக நொறுங்கிப் போனது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் தான் பாலத்திற்கு சூட்டப்பட்ட பெயரில் சாதி பெயர் இருப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.

First Published :

October 13, 2025 11:36 AM IST

Read Entire Article