டிஎன்பிஎஸ்சி நடத்தும் தொழில்நுட்பப் பணி தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

1 hour ago 6

சென்னை, ஜூலை 22– டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வுகளுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பின்னர் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பதவிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிரித்ததாலும், புதிய பதவிகள் சேர்க்கப்பட்டதாலும் கூடுதலாக 15 காலியிடங்கள் சேர்த்து மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 461-லிருந்து 478 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு களுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் ஆகஸ்ட் 16 முதல் 20ஆம் தேதி வரையும், தொடர்ந்து செப்டம்பர் 7 முதல் 19ஆம் தேதி வரையும் இடைவெளி விட்டு நடத்தப்பட உள்ளன. அனைத்து பதவிகளுக்கும் பொதுத் தேர்வான கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு மற்றும் பொது அறிவு தாள் தேர்வு செப்டம்பர் 19ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

மேலும், இளநிலை அறிவியல் அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2), உதவி புள்ளியியல் ஆய்வாளர், ஜூனியர் ஆர்க்கிடெக்ட் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆகிய பதவிகளில் காலிப் பணியிடங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 476-லிருந்து 508 ஆக அதிகரித்துள்ளது.

Read Entire Article