தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை! ஒன்றிய அரசு முடிவு!

13 hours ago 16

புதுடில்லி, மே 12- மேற்கு ஆசியப் போர் பதற்றம் காரணமாக இந்தியாவுக்கு வரும் எரிபொருள் வரத்து குறைந்துள்ளது, இதேபோல் சேமிப்புக் கிடங்கில் இருக்கும் கச்சா எண்ணெய் இருப்பும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் அடுத்தக்கட்டமாக ஆபத்து காலக்கட்டத்தில் பயன்படுத்துவதற்காக சேமித்து வைக்கப்பட்ட எண்ணெய்யை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் நிலை வரும் என அச்சம் நிலவுகிறது.

எனவே, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மீண்டும் ‘வீட்டிலிருந்து பணி’ (Work From Home) நடைமுறையை அமல்படுத்தலாம் என மோடி பரிந்துரை செய்தார்.

இதைத் தொடர்ந்து இந்தியா வின் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரியும் சுமார் 58 லட்சம் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை மீண்டும் கொண்டு வர ஒன்றியத் தொழிலாளர் அமைச்சகம் ஆலோசனை வெளியிட வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப ஊழியர் அமைப்பான  என்அய்டிஈஎஸ் (NITES) எனப்படும் Nascent Information Technology Employees Senate கோரிக்கை வைத்துள்ளது.

பிரதமர்
மோடியின் கோரிக்கை

நேற்று (11.5.2026) அய்தரா பாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதார நலனுக்காக மக்கள் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும், கரோனா காலத்தில் நடைமுறையில் இருந்த ‘வீட்டிலிருந்து பணி’ முறைகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மோடியின் பேச்சைத் தொடர்ந்து, மென்பொருள் துறையிலும் மீண்டும் வீட்டி லிருந்து பணி முறையை நடை முறைப்படுத்த ஆலோசனைகள் ஊழியர்கள் மத்தியிலும், நிர்வாகங்கள் மத்தியிலும் விவாதம் வேகமடைந் துள்ளது.

வீட்டிலிருந்து பணி

ஒன்றியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், NITES அமைப்பு முக்கியமான வாதங்களை முன்வைத்துள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் மென்பொருள் துறை எந்த பெரிய பாதிப்பும் இல்லாமல் வீட்டிலிருந்து பணி முறையில் செயல்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பல பணிகளைத் தொலைதூர முறையில் திறம்பட மேற்கொள்ள முடியும் என்பது கரோனா காலத்திலேயே நிரூபிக்கப்பட்டது. தொழில்நுட்ப ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் இது சாத்தியமான நடைமுறை என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கான தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் நாள் தோறும் பல மணி நேரங்கள் அலுவலகத்திற்குப் பயணம் செய்கின்றனர். இதனால் எரிபொருள் பயன்பாடு மட்டுமல்லாமல், நகரப் போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கிறது என்று ஊழியர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கியமாக பெங்களூரு, சென்னை, அய்தராபாத், புனே மற்றும் குருகிராம் போன்ற தகவல் தொழில்நுட்ப (அய்டி) நகரங்களில் நாள்தோறும் அலுவலகப் போக்குவரத்து மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளதாக. வீட்டிலிருந்து பணி நடைமுறை அமல்படுத்தப்பட்டால், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு கணிசமாகக் குறைய வாய்ப்பு இருப்பதாகவும், இது தேசிய அளவிலான எரிபொருள் சேமிப்பு முயற்சிக்கு பெரிய அளவில் உதவும்.

அனைத்தையும் விட முக்கியமாக மற்ற துறைகளை காட்டிலும் தகவல் தொழில்நுட்ப துறையால் வீட்டிலிருந்து பணி முறையில் எளிதாகவும் இயங்க முடியும், வேகமாகவும் மாறிக்கொள்ளவும் முடியும்.

இதனால் ஒன்றியத் தொழி லாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா விரைவில் NITES அமைப்பின் மனுவுக்குப் பதில் அளிப்பார். இந்த பதிலில் ‘வீட்டிலிருந்தே பணி’  என்பது குறித்த நிலைப்பாடு தெரிந்துவிடும்.

Read Entire Article