தஞ்சையில் 4ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு; அனுமதி கொடுத்த காவல்துறை

2 hours ago 18

Last Updated:Mar 01, 2026 10:18 PM IST

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் வரும் 4ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நிர்வாகிகள் சந்திப்புக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

News18
News18

கரூர் அசம்பாவிதத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்பை நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றி ஒவ்வொரு கூட்டத்திற்கு 5,000 நிர்வாகிகளை மாவட்டவாரியாக நடத்திவருகிறார்.

அந்தவகையில், கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியில் நிர்வாகிகள் சந்திப்பை விஜய் மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், “நான் நேரில் வந்து உங்களை சந்திக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஒரு எதிர்கட்சியாக இருந்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நமக்கு எதிராக என்ன சூழ்ச்சி நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே, நம் ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து என் சொந்தங்களாகிய உங்களை சந்திக்கிறேன்.

அண்மையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு உருட்டு உருட்டினார். அதாவது, தமிழ்நாட்டுக்கும் - டெல்லிக்குமான தேர்தல் என்கிறார். டெல்லியில் எதுவும் போட்டியிடுகிறீர்களா? பிறகு எதற்கு அதைப்பற்றி பேசுகிறீர்கள். எந்த தேர்தலை எப்படி கையாள வேண்டும் என்பது நம் தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்” என பேசியிருந்தார்.

இந்நிலையில், வேலூர் கூட்டத்தைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் வரும் 4ஆம் தேதி நிர்வாகிகள் சந்திப்புக்கு காவல்துறையிடம் தவெக தரப்பில் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுள்ள காவல்துறை, தஞ்சை, செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

First Published :

Mar 01, 2026 10:18 PM IST

Read Entire Article