தந்தை பெரியார் துருக்கி சென்றடைந்த நாள் இன்று (10.2.1932)

1 hour ago 18

வரலாற்றுச் சிறப்பு மிக்க துருக்கி நகரமான கான்ஸ்டாண்டிநோபிலுக்கு (தற்போது இஸ்தான்புல்) தந்தை பெரியார் சென்றடைந்த நாள் இன்று (10.02.1932).

பழமைவாத கொள்கையை மிகவும் தீவிரமாக கடைப்பிடிக்கும் ஒட்டாமன் மன்னராட்சியை  புரட்சி மூலம் முடிவிற்கு கொண்டு வந்து சோசலிச அரசை நிறுவனார் துருக்கி நாட்டின் முதல் அதிபரான் கமால் பாட்சா.  அவர் ஆட்சியில் இருந்த போது துருக்கியைச் சுற்றிலும் பழைமைவாத தீவிர மதவாத அரசுகள் இருந்த போதும் துருக்கியை மதச்சார்பற்ற நாடாக அறிவித்தார். பெண்களுக்கு முழு சுதந்திரம் வழங்கி அவர்கள் வேலைக்குச் செல்லவும், அவர்களுக்கு ஆண்களுக்குச் சமமான ஊதியம் வழங்கவும் சட்டத் திருத்தம் கொண்டுவந்தார். குறிப்பாக  பல்வேறு பெரிய மத வழிபாட்டுத்தலங்களை உயர்கல்வி நிலையமாகவும், புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாகவும் மாற்றினார்.,

மேலும் துருக்கி எழுத்துருவை சீர்படுத்தி நவீன உலகிற்குச் செல்ல புதிய எழுத்துரு நமக்கு தேவை என்று கூறி அதற்காக குழு அமைத்து துருக்கி எழுத்துச்சீர்திருத்ததைக் கொண்டுவந்தார். இவை அனைத்தையும் மக்களின் பெரும் ஆதரவோடு எந்த எதிர்ப்பும் இன்றி கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தந்தை பெரியார்  துருக்கிக்குச் சென்றபோது, இந்த புரட்சிகர அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. அரசியலில் பெரிதும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்த அரபு மொழி முற்றிலும் விலக்கி தாய்மொழியான துருக்கிய மொழியே முதன்மையாக ஆங்கிலம், இரண்டாவதாக மாற்றப்பட்டது  மேலும் பெண்களுக்கான உரிமைகள் போன்றவற்றை தந்தை பெரியார் நேரில் கண்டு வியந்தார்.

பகுத்தறிவுப் பார்வை

ஒரு இசுலாமிய நாடாக இருந்த துருக்கி, எப்படித் தன்னை நவீனப்படுத்திக் கொள்கிறது என்பதை அவர் தனது பகுத்தறிவு பார்வை கொண்டு  “குடிஅரசு” இதழில் விரிவாக எழுதினார்.

துருக்கியில் அவர் கண்ட மாற்றங்கள், தமிழ்நாட்டிலும் அவர் முன்னெடுத்த சீர்திருத்தக் கருத்துகளுக்கு மேலும் வலுசேர்த்தன.

1968-ஆம் ஆண்டு மே மாதம் அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது   அரசாணை எண்: பொதுத்துறை அரசாணை எண் 1137 (G.O. Ms. No. 1137), நாள்: 11.06.1968.

நோக்கமும் தாக்கமும்

அரசு அலுவலகங்கள் என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவான இடம். அங்கு ஒரு குறிப்பிட்ட மத அடையாளங்களோ, கடவுளர் படங்களோ இருப்பது மற்ற மதத்தினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் அல்லது மதச் சார்பின்மைக்கு எதிராக அமையலாம் என்பதால் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. இது துருக்கியில் தந்தை பெரியார் கண்டு அதை குடிஅரசு இதழில் எழுதியதன் தாக்கம் என்று கலைஞர் பல முறை கூறியுள்ளார்.

துருக்கிக்கு தந்தை பெரியார் சென்று வந்து அதுதொடர்பாக குடிஅரசு இதழில் எழுதியதன் தாக்கம் அறிஞர் அண்ணா 1940களில் கமால்பாட்சாவின் வாழ்க்கை வரலாறு எழுதும் வரை சென்றது.

1932 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் துருக்கிப் பயணம் வெறும் பயணம் என்றதோடு மட்டுமல்லாமல் – தமிழ்நாட்டின்  அரசியலில் பெரிய புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் காரணமாக ஆனது.

Read Entire Article