தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின்! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்பு

1 day ago 1

தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மானமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சுயமரியாதைக் கொள்கைத் தெளிவுள்ள பகுத்தறிவு வாதி, உழைப்பாளி. நல்ல பரப்புரையாள ரும்கூட. அவரது தேர்தல் பிரச்சார முறைகளே அதற்குத் தக்கச் சான்று.

இந்த காலகட்டத்தில் அவர் எதிர்க்கட்சித் தலைவராகி உள்ளது இன்றியமையாத் தேவை யாகும்! அவரது திறமை மேலும் வெளிவர நல் வாய்ப்பு இது!

அவர், ‘‘தலைவர் (மு.க.ஸ்டாலின்) அவர்கள் எனக்கு அளித்த இந்தப் பொறுப்பை சிறப்பாக ஆற்றுவேன்; எதிர்க்கட்சியை, எதிரிக்கட்சியாக்கிடாமல், ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக நடத்திக் காட்டுவோம்’’ என்று தெளிவுபடுத்தியுள்ளார். நம்பிக்கை தரும் செய்தி இது!

அதுபோலவே, சட்டமன்றத்தில் நீண்ட அனுபவமும், துணிவுடன் செயல்படும் ஆற்றல் உள்ள மானமிகு கே.என்.நேரு அவர்கள், சட்டமன்ற தி.மு.க. கட்சியின் துணைத் தலைவர், கொறாடவாக மானமிகு எ.வ.வேலு அவர்கள் தேர்வும் சிறப்பானவை! வரவேற்கத்தக்கதவை!

அனைவருக்கும் நமது வாழ்த்துகள்!

 கி.வீரமணி

    தலைவர்,

  திராவிடர் கழகம்

சென்னை

Read Entire Article