தனுஷின் இட்லி கடை படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்.
14
Idli Kadai vs Kantara Chapter 1
ஹீரோவாக மட்டுமின்றி பான் இந்தியா அளவில் ஹீரோவாகவும் ஜொலித்து வருபவர்கள் என்றால் அது தனுஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி தான். இவர்கள் இருவரும் தாங்கள் நடித்து இயக்கிய படங்களை ஒரே நேரத்தில் போட்டி போட்டு ரிலீஸ் செய்துள்ளனர். அந்த வகையில் தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்த இட்லி கடையும், ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் அக்டோபர் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆனது. இதில் இட்லி கடை திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.
24
தமிழ்நாட்டில் போட்டா போட்டி
தமிழ்நாட்டில் தனுஷ் முன்னணி ஹீரோவாக இருந்தாலும், அவரது இட்லி கடை படத்திற்கு நிகராக காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் திரையிடப்பட்டது. முதல் வாரத்தில் காந்தாரா படத்தை இட்லி கடை டாமினேட் செய்த நிலையில், இரண்டாவது வாரத்தில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது. காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்திற்கு தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டி உள்ளனர். இதனால் இட்லி கடை திரைப்படம் தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கி இருக்கிறது. மறுபுறம் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் திரும்பிய பக்கமெல்லாம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
34
இட்லி கடை திரைப்படத்தின் தமிழ்நாடு வசூல்
இட்லி கடை திரைப்படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக இன்பன் உதயநிதி தான் ரிலீஸ் செய்திருந்தார். அவர் வெளியிட்ட முதல் படம் இதுவாகும். இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாள் 8 கோடி வசூலித்தது. அதன்பின் நாளுக்கு நாள் அப்படத்தின் வசூல் சரசரவென சரியத் தொடங்கியது. நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் இப்படத்திற்கு 1.30 கோடி வசூல் கிடைத்தது. ஆனால் காந்தாரா சாப்டர் 1 படத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் அதில் பாதி கூட இட்லி கடை வசூலிக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டிலும் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாறி இருக்கிறது காந்தாரா சாப்டர் 1.
44
காந்தாரா சாப்டர் 1 தமிழ்நாடு வசூல்
காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை ரூ.37 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இட்லி கடை படம் ரிலீஸ் ஆகி 12 நாட்கள் ஆன போதிலும் அதன் வசூல் 30 கோடியை கூட எட்டவில்லை. இதனால் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் தனுஷ் படத்தை ஓரங்கட்டி மாஸ் காட்டி உள்ளார் ரிஷப் ஷெட்டி. காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் நேற்று மட்டும் தமிழ்நாட்டில் ரூ.5 கோடி வசூலித்திருக்கிறது. இட்லி கடை படம் அதைவிட ரூ.3.7 கோடி கம்மியாக வசூலித்துள்ளது. காந்தாரா படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதால், இட்லி கடை படத்திற்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகளையும் காந்தாரா ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. இதனால் விரைவில் தமிழ்நாட்டில் 50 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.