Last Updated:Feb 09, 2026 6:36 PM IST
தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி பிரச்சனை குறித்து பி.எல். சந்தோஷ் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் ஆலோசனை.

தமிழ்நாடு பாஜக உட்கட்சி பிரச்சனைகளை சரி செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில், பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்துவருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநில அமைப்புச் செயலாளராக இருக்கும் கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும். பாஜக தமிழ்நாடு முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் குறித்தும், சட்டமன்றத் தேர்தலில் பாஜக செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு பாஜக அலுவலகமான கமலாலயத்தில், பாஜக சட்டமன்ற பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்.
அதில், குறிப்பாக தேர்தலுக்கு இன்னும் 65 நாட்களே உள்ளது என்றும், அனைவரும் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் முதல் கட்டத்திலேயே, அதாவது ஏப்ரல் மாதமே தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே தேர்தலுக்கு தீவிரமாக தயாராக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜகவுக்குள் இருக்கும் உட்கட்சி பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஆலோசனை நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
.png)




English (US) ·