Last Updated:Jul 23, 2026 9:58 AM IST
தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியானது.

தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியானது.
முதலமைச்சரான பிறகு, விஜய்யின் முதல் படமும், அவரது திரைப்பயணத்தின் கடைசி படமுமாக உள்ள ஜனநாயகன், பல்வேறு தடைகளை தாண்டி இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று காலை 9 மணிக்கு ‘ஜனநாயகன்’ ரிலீஸானது. இதையொட்டி, சென்னையில் உள்ள திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
கேரளாவில் காலை 6 மணிக்கே ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் காலை 6 மணிக்கு வெளியானது. அங்கே ஜனநாயகன் விஜய் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்த தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆந்திராவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஜனநாயகன் தமிழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மற்ற பகுதிகளில் தெலுங்கில் வெளியாகியுள்ளது.
அதேபோல், கோவை பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் காட்சி காலை 7 மணி அளவில் வெளியானது. தமிழகத்தில் முதல் தியேட்டராக கோவையில் 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியானது.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் காலை 9 மணிக்கு படம் ரிலீஸ் ஆனது. சென்னை ரோகிணி திரையரங்குகளில் வழக்கம் போல் ஆரவாரத்துடன் ஜனநாயகன் படம் வெளியானது. திரைத்துறை சார்ந்தவர்கள் அதிகம் ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்க வர உள்ளதால் காவலர்கள் உடன் பவுன்சர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் ரோகிணி திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் பார்த்து வருகின்றனர். அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் உள்ளிட்டோரும் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
முன்னதாக தியேட்டரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண் ராஜ், "படம் இணையத்தில் கசிந்து இருந்தாலும் இவ்வளவு மக்கள் ஜனநாயகன் படம் பார்க்க வந்துள்ளார்கள். இந்த அன்பிற்கு நன்றிகள். ரொம்ப எமோஷனலாக உள்ளது. இந்த படத்தில் நானும் ஒரு காட்சியில் நடித்துள்ளேன். மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது. உங்களை போல நானும் படம் பார்க்க ஆவலாக உள்ளேன்" என்று கூறிவிட்டுச் சென்றார்.
முன்னதாக படத்தில் விஜய் அறிமுகமாகும் டைட்டில் கார்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்று குறிப்பிட்டுள்ளதுடன் சட்டமன்றத்தில் செய்த சைகை காட்சிகளும் டைட்டில் கார்டாக இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோக்களை ரசிகர்கள் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Location :
Chennai [Madras],Chennai,Tamil Nadu
.png)








English (US) ·