தமிழ்நாடுக்கு ஏப்ரல் மாதத்திலேயே சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது? – பாஜக ஆலோசனை கூட்டத்தில் வெளியான தகவல்

21 hours ago 15

Last Updated:Feb 09, 2026 3:25 PM IST

தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்களுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிற்கு முதற்கட்டத்திலேயே நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News18
News18

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படும் எனும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் நடைபெற வாய்ப்பு இருக்கக்கூடிய முதற்கட்டத் தேர்தலிலேயே தமிழ்நாடுக்கு தேர்தல் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்த நிலையில், பாஜக சட்டமன்ற பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார். அதில், குறிப்பாக தேர்தலுக்கு இன்னும் 65 நாட்களே உள்ளது என்றும், அனைவரும் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் முதல் கட்டத்திலேயே, அதாவது ஏப்ரல் மாதமே தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே தேர்தலுக்கு தீவிரமாக தயாராக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமையும் என்றே பாஜக தலைவர்கள் முன்னிலைப்படுத்தி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

தமிழ்நாடுக்கு ஏப்ரல் மாதத்திலேயே சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது? – பாஜக ஆலோசனை கூட்டத்தில் வெளியான தகவல்

Read Entire Article