தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு… எப்போது நடக்கிறது?

8 hours ago 7

Last Updated:May 12, 2026 7:35 PM IST

திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கும் தவெக அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது.

விஜய்
விஜய்

நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு நாளை பெரும்பான்மை நிரூபிக்க இருக்கிறது.

நாளை காலை 9:30 மணிக்கு பேரவை தொடங்கியவுடன் பெரும்பான்மை நிரூபிப்பதற்கான தொடக்க உரையில் முதலமைச்சர் பேசுகிறார். பிறகு பெரும்பான்மை நிரூபிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் என்ன என்பதை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க அல்லது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க, அவை நடவடிக்கையில் கலந்து கொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் சரிபாதிக்கும் மேல், அதாவது குறைந்தபட்சம் 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தனிப்பெரும் கட்சி அல்லது கூட்டணிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்து, ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவார்.

முதலமைச்சர் அல்லது ஆளுநரால் நியமிக்கப்பட்டவர், தனது ஆட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்க "நம்பிக்கை தீர்மானத்தை" (Motion of Confidence) சபையில் கொண்டு வருவார். சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு (Voice Vote) மூலமாகவோ, அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை எண்ணுவதன் மூலமாகவோ (Division of Votes) வாக்கெடுப்பு நடத்தலாம்.

பெரும்பான்மை இல்லையெனில், ஒரு கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 174-ன் படி, ஆளுநர் ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைக்கலாம்.

Read Entire Article