தவெக விஜய்க்கு ஆதரவளித்து பேசிய காமராஜ்... கட்சியில் இருந்து நீக்கிய டிடிவி

14 hours ago 14

Last Updated:May 12, 2026 2:58 PM IST

கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய நிலையில் காமராஜை அடிப்படை உறுப்பினர் உள்ப அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, " அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் , கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது என்பதால் காமராஜ் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Read Entire Article