"தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தால் சட்டப்படி நடவடிக்கை..." - ஈபிஎஸ் தரப்பு

12 hours ago 9

Last Updated:May 12, 2026 4:42 PM IST

"தவெகவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏக்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

திமுகவுடன் கூட்டணி பேசியதாக சி.வி.சண்முகம் கூறுவது அவதூறு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்தது. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 3 ஆவது இடத்தில் இருந்த அதிமுக, தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்து பரபரப்பை கிளப்பியது.

மேலும், எஸ்.பி., வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் தனி அணியாகவும், ஈபிஎஸ் உடன் சில எம்.எல்.ஏ.-க்களும் அடுத்தடுத்து ஆலோசனைகள் நடத்தின. இதன் நீட்சியாக, அதிமுக சட்டப்பேரவை தலைவராக எஸ்.பி.வேலுமணியை நியமிக்க ஒரு தரப்பினரும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்தனர்.

இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி. நகரில் செய்தியாளர்களை சந்தித்த சி.வி. சண்முகம், திமுகவின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயன்றதாக குற்றம்சாட்டினார்.

தேர்தலுக்கு முன்பிருந்த எந்த கூட்டணியிலும் தற்போது அதிமுக இல்லை என்று பாஜகவுடனான கூட்டணி முறிவை சி.வி.சண்முகம் அறிவித்தார். தொடர்ந்து பேசிய சி.வி.சண்முகம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி, விஜய் தலைமையிலான தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது குறித்து ஆலோசித்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்சியின் பொதுக்குழுவை ஈபிஎஸ் கூட்ட வேண்டும் என சி.வி.சண்முகம் வலியுறுத்தினார்.

பின்னர் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கட்சியை உடைக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், ஈபிஎஸ் இறங்கி வர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், திமுகவின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயன்றதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றம்சாட்டினார்.

"தவெகவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏக்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் எச்சரித்தனர்.

Read Entire Article