தாய்லாந்து ரயில் விபத்தில் 8 பேர் பலி, 25 பேர் காயம்

1 hour ago 9

At least eight dead, 25 injured in train collision that sparks bus fire in Thailand

Eight people died and 25 were seriously injured in a horrific train accident in Bangkok, Thailand, on Saturday, May 16. A train, bus, cars, and motorcycles collided at a railway crossing, igniting a fire that caused the fatalities. Firefighters and rescue teams fought the blaze, rescued trapped victims, and brought the fire under control. Police are currently investigating the exact cause of the accident.

Generated by AI

https://www.straitstimes.com/asia/at-least-eight-dead-25-injured-in-train-collision-that-sparks-bus-fire-in-thailand?ref=latest-headlines

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் சனிக்கிழமை (மே 16) நடைபெற்ற ரயில் விபத்தில் எட்டுப் பேர் உயிரிழந்தனர், 25 பேர் படுகாயமடைந்தனர் என்று மீட்புப்படை அதிகாரிகளும் காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள ஒரு ரயில் சந்திப்பில் ரயில், பேருந்து, கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.

மோதிய வேகத்தில் அங்கிருந்த பொதுப் பேருந்து, அருகில் நின்ற வாகனங்கள் மீது தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.

தீயணைப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரைப் பாய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடினர்.

அதே நேரத்தில், விபத்துக்குள்ளான வாகனங்களுக்குள் சிக்கி உயிருக்குத் போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்புக் குழுவினர் விரைந்து மீட்டனர்.

தற்போது தீ முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் எவரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என்று மீட்புப்படையினர் தேடி வருகின்றனர்.

இந்த கோர விபத்துக்கான சரியான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article