இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வருகிறார் அக்டோபர் 20ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதனிடையே, தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 9நாட்களே உள்ள நிலையில் திருச்சியின் வணிக மையமாக திகழும் சிங்காரத்தோப்பு, என்எஸ்பி ரோடு, மலைவாசல் மற்றும் பெரிய கடைவீதி, பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள் மற்றும் ஷோரூம்களில் ரெடிமேட் ஆடைகள் வாங்கவும், தள்ளுபடியில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அதேநேரம், தரைக்கடைகளில் பல புதிய ரகங்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் ஆடைகள் வாங்க ஆர்வம்காட்டினார்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி என்எஸ்பி ரோடு, சிங்காரதோப்பு மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளில் தீபாவளி பொருட்கள், ஆயத்த ஆடைகள் வாங்கவரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாநகர காவல்துறை சார்பில் காவல் கட்டுப்பாட்டு அறை,
நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிங்காரத்தோப்பு, மலைவாசல், நந்திகோவில் தெரு உள்ளிட்ட 8 இடங்களில் கண்காணிப்புகோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்கும் வகையில் தெப்பக்குளம் பகுதியில் தீபாவளி வரை செயல்பாட்டில் இருக்கும் வகையில் காவல் கட்டுப்பாட்டுஅறை அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் 1327 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.கடந்த ஆண்டைக் காட்டிலும் 114 கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய வாகனங்களும், சுழலும் கேமராக்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டு அறையிலும் புற காவல் நிலையத்திலும் இதற்காக தனி குழுக்கள் செயல்படுவார்கள், குற்றப்பிரிவு போலீசாரும் இணைந்து செயல்பட உள்ளனர்.
ஒருவார காலத்திற்கு போக்குவரத்து காவலர்கள் 50 பேரும் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் 50பேரும் என 100 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள், பண்டிகை நெருங்கும் சமயத்தில் ஊர்க்காவல் படையினர் மற்றும் போலீசார் கூடுதலாக பணியாரத்தப்படுவார்களோ தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புடன் வந்து பொதுமக்கள் தீபாவளி பொருட்களை வாங்கிச்செல்லவும், அதேநேரம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் காவல்துறையை அணுகலாம் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..
குறிப்பாக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர்,கரூர்,தஞ்சாவூர்,நாகை,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தீபாவளி பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி செல்கின்றனர்..
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision