“தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு, கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் பகுதிகளில் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பை கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் கண்காணிக்கவும் NSCB ரோடு தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் (Temporary Police Out Post) கடந்த (10.10.2025)-ந்தேதி திருச்சி மாநகர காவல்துறை சார்பாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து, பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக காவல் ஆளினர்கள் தேவைபடுகிறதா என்பதை ஆய்வு செய்யும் விதமாக இன்று (13.10.2025)-ந்தேதி மாலை மேற்படி தற்காலிக காவல் உதவி மையத்திற்கு மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தும், மலைக்கோட்டை ஆர்ச், NSCB ரோடு, சின்னகடை வீதி பகுதிகளில் நடை ரோந்து (Foot Patrolling) சென்றும் அங்கு பணியில் உள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் ஆளினர்களுக்கு, குற்ற சம்பவங்கள் நடைபெறாவண்ணம் கண்காணிக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல கண்காணிக்கவும் தக்க அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக பொதுமக்கள் நிறுத்தி சென்ற இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தியும் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை போக்குவரத்து காவல் ஆளினர்கள் உறுதி செய்திடவும், சாலையோர கடைகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாநகராட்சி ஒதுக்கீடு செய்த இடத்தில் அமைத்து விற்பனை செய்திடவும் அறிவுரைகள் வழங்குமாறு காவல் அதிகாரிகளுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision