போலி ஆவண வழக்கு: இருங்களூர் வேட்பாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

10 hours ago 7

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த ஜெயந்தி, (53), க.பெ. செல்வராஜ், என்பவர் பட்டியலின மக்களுக்கான சலுகைகளைப் பெறுவதற்காக, போலி ஆவணங்களைத் தயாரித்து, அதைப் பயன்படுத்தி, இருங்களூரில் உள்ள 9-வது வார்டு தேர்தலில் போட்டியிட்டதாகவும், மேற்படி நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வேல்முருகன் 31, த.பெ. பெரியசாமி, அண்ணா நகர், புறத்தாக்குடி, மண்ணச்சநல்லூர் தாலுகா என்பவர் கொடுத்த புகார் மீது சமயபுரம் காவல் நிலைய குற்ற எண்.59/23 u/s 171(g), 193, 465, 466, 468, 471 IPC r/w 3(1) (q), of SC/ST (POA) Act ன் படி 16.02.2023 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (I-ADJ)நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக சக்திவேல் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (13.10.2025) திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் (I-ADJ) அவர்கள் எதிரி ஜெயந்தி என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும். ரூபாய்.2,000 அபராதமும், வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ரகுராமன் மற்றும் நீதிமன்ற காவலர் விக்னேஷ்ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம், அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

Read Entire Article