திருமணத்தை மீறிய உறவு.. ராணுவ வீரர், தந்தைக்கு நடந்த கொடூரம்.. விசாரணையில் பெண் சொன்ன ஷாக் தகவல்!

14 hours ago 14

Last Updated:May 12, 2026 3:00 PM IST

கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு, நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

கைதானவர்கள்
கைதானவர்கள்

கிருஷ்ணகிரியில் தந்தை, மகன் என இருவரை அரிவாளால் வெட்டிக்கொன்று, இருவரின் உடல்களை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் கொடுகூர் பகுதியில் சாலையோரத்தில் இரு உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தன. எங்கேயே கொலை செய்து, அவர்களின் உடல்களை எடுத்து வந்து, சாலை ஓரத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி து வைத்து எரித்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு, நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், கொலை செய்து எரிக்கப்பட்டு கிடந்த இருவர் தந்தை, மகன் என்பதும், அதில் ஒருவர் ராணுவ வீரர் என்ற அதிர்ச்சி தகவலும் போலீசாருக்கு தெரியவந்துள்ளன. கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறி பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார், ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பானுப்பிரியா என்பருடன் திருமணம் நடைபெற்று இரண்டு மகன்கள் உள்ளனர். மகேஷ்குமார் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதால் மனைவி பானுப்பிரியா தனது இரண்டு மகன்கள் மற்றும் மாமனார் செல்லப்பன் மாமியார் காளியம்மாள் ஆகியோருடன் பாலகுறி பகுதியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன் என்பவருடன் பானுப்பிரியாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினர் மற்றும் ஊராருக்கு தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் மகேஷ்குமாருக்கும் மனைவியின் நடத்தை தெரியவந்துள்ளது. கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரில் இருந்து விடுமுறையில் வந்த மகேஷ்குமார், தனது மனைவி பானுப்பிரியாவின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.

இதையும் படிங்க: தாயை தாக்கிய மகன்.. ஓட, ஓட விரட்டி இரும்புக் குழாயால் அடித்தே கொன்ற தந்தை.. திருச்சியில் பகீர் சம்பவம்!

அதில் பூவரசனுக்கும், மனைவி பானுப்பிரியாவுக்கும் தவறான தொடர்பு இருப்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் இருந்துள்ளன. இதுகுறித்து மனைவியிடம் அவர் கேட்க, இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பூவரசனிடம் பானுப்பிரியா தெரிவிக்க, இருவரும் சேர்ந்து ராணுவ வீரர் மகேஷ்குமாரை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர்.  சம்பவத்தன்று அரிவாளுடன் மகேஷ்குமாரின் வீட்டிற்குள் சென்ற பூவரசன், மகேஷ்குமாரையும், தடுக்க வந்த மகேஷ்குமாரின் தந்தையான செல்லப்பனையும் வெட்டி கொலை செய்துள்ளார்.

பின்னர் இருவரின் உடல்களை பெட்ஷீட்டில் கட்டி எடுத்துச் சென்று அருகில் உள்ள கொடுகூர் பகுதியிலும், வெப்பாலம்பட்டி பகுதியிலும் போட்டு தீ வைத்து எரித்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பானுப்பிரியா மற்றும் பூவரசன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

திருமணத்தை மீறிய உறவு.. ராணுவ வீரர், தந்தைக்கு நடந்த கொடூரம்.. விசாரணையில் பெண் சொன்ன ஷாக் தகவல்!

Read Entire Article