துரைமுருகனின் அறையில் ஆனந்த்; கே.என்.நேரு அறையில் அருண்ராஜ்! - தலைமைச் செயலக சுவாரஸ்யங்கள்!

13 hours ago 15

தவெக தனிப்பெரும் கட்சியாக வந்துவிட்ட உடனேயே தலைமைச் செயலகத்தில் உள்ள திமும அமைச்சர்களின் அலுவலகங்களை ஊழியர்கள் சுத்தம் செய்து துடைத்தெடுத்து பக்காவாக புதிய அமைச்சர்களுக்கென ரெடி செய்து வைத்துவிட்டனர்.

Published:1 min agoUpdated:1 min ago

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்று 3 நாட்கள் ஆகிறது. திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகள் ஆட்சி நடத்திய சட்டமன்றத்தில் இப்போது தவெகவின் ஆட்சி நடக்கிறது. தவெக-வினரின் வருகையால் சட்டமன்றமே ஒருவித புதுமையோடு காணப்படுகிறது.

Vijay

Vijay

தலைமைச் செயலக பீட் பார்க்கும் செய்தியாளர்களுக்கும் கேமராமேன்களுக்கும் முதல்வர் - தலைவர் என்றால் ஸ்டாலின் என்றும் பொதுச்செயலாளர் என்றால் எடப்பாடி பழனிசாமி என்றும் மனதில் பதிந்திருக்கும்.

இன்று திடீரென ஒரு நபர் வந்து கேமரா மேன் ஒருவரிடம், 'அண்ணன் பொதுச்செயலாளர் அசம்பிளில இருந்து கிளம்பிட்டாரா?' எனக் கேட்க, அவர் ஒரு நிமிடம் விக்கித்து நின்று 'யாருங்க எடப்பாடியா...' என்றார். 'அவர் இல்லங்க...எ ங்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கேட்டேன்' என்றவுடன் கேமராமேன் ஆடிப்போய் 'நாமதான் இன்னும் கன்பியூஸன்ல இருக்கோம் போல...' எனக் கூறி சிரித்துச் சென்றார்.

அதேமாதிரி, முன்னெப்போது இல்லாத வகையில் முதல்வரின் கான்வாயை வேடிக்கை பார்க்க காலையும் மதியமும் ஒரு கூட்டம் கூடி விடுகிறது. அவர்களை கட்டுப்படுத்துவதற்குள் தலைமைச் செயலக ஊழியர்கள் கடும் பாடுபடுகின்றனர்.

முதல்வர் அலுவலகம்

முதல்வர் அலுவலகம்

பொதுமக்கள், தொண்டர்களை கடந்து தலைமைச் செயலக ஊழியர்களே முதல்வரின் ரசிகராக ஜாலி செய்து கொண்டிருக்கின்றனர். தலைமைச் செயலகத்தில் கேட் 4 க்கு அடுத்ததாக கேண்டீன்களுக்கு அருகே ஒரு வாயில் இருக்கும். அங்கே அப்போதைய அரசின் செயல்பாடுகளையும் முதல்வரின் செயல்பாடுகளையும் கண்ணாடி பேழைக்குள் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

தேர்தலுக்கு முன்பு அந்த இடத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் படம் இருந்தது. இப்போத அந்த இடத்தில் இப்போதைய முதல்வர் விஜய்யின் படத்தை வைத்திருக்கிறார்கள். அந்தப் படங்களின் முன்பு நின்று தலைமைச் செயலக ஊழியர்கள் தங்களின் ஓய்வு நேரத்தில் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

சில தொண்டர்களும் நிர்வாகிகளும் முதல்வரின் அறையின் முன்பு நின்று புகைப்படம் எடுக்க விரும்பி தலைமைச் செயலகத்தை சுற்றித் திரிவதால் எம்.எல்.ஏ பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதி காவலர்கள் கெடுபிடியும் காட்டுகின்றனர்.

விஜய் படத்துடன் செல்பி

விஜய் படத்துடன் செல்பி

தவெக தனிப்பெரும் கட்சியாக வந்துவிட்ட உடனேயே தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலகங்களை ஊழியர்கள் சுத்தம் செய்து பக்காவாக புதிய அமைச்சர்களுக்கென ரெடி செய்து வைத்துவிட்டனர். விஜய்யோடு அமைச்சரவையில் 9 பேர் மட்டுமே இப்போது பதவியேற்றுக் கொண்டனர். அந்த அமைச்சர்களில் சிலர் பதவியேற்ற அன்றே தங்களுக்கு எந்த அறை வசதியாக இருக்குமென பார்த்து தேர்வு செய்து இடம்பிடித்திருக்கின்றனர்.

அந்தவகையில் புஸ்ஸி ஆனந்த் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் அறையிலும், அருண்ராஜ் கே.என்.நேருவின் அறையிலும், ராஜ்மோகன் பி.டி.ஆரின் அறையிலும் செட்டில் ஆகியிருக்கின்றனர். இன்னும் சிலர் தற்காலிமாக ஒரு அறையில் குடியேறிவிட்டு, பின்னர் சௌகரியமான அறையை கேட்டுப் பெறும் முடிவில் இருக்கின்றனராம்.

எந்த முதல்வரின் கான்வாயையும் செய்தித் தொடர்புதுறையின் கார் ஒன்று எப்போதும் பாலோ செய்யும். காருக்குள் கேமராமேன்கள் இருப்பார்கள். போக வேண்டிய இடம் வந்தவுடன் முதல்வர் காரை விட்டு இறங்குகையில் இவர்களும் காரை விட்டு இறங்கி தடதடவென ஓடி போட்டோ எடுப்பார்கள். இதுதான் வழக்கம். ஆனால், விஜய் முதல்வரான பின்னர் செய்தித் தொடர்புத்துறையின் காரின் மேல் 2 கேமராமேன்கள் உட்கார்ந்து அவரின் பிரசார பாணியில் கான்வாயை முழுவதும் பாலோ செய்கின்றனர்.

Read Entire Article