தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 'சிபிஐ விசாரணைக்கு ஏன் இவ்வளவு காலதாமதம்?' - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

1 hour ago 7

Last Updated:Jul 24, 2026 12:32 PM IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணை தாமதம் ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி. தமிழ்நாடு அரசு, சிபிஐ பதிலளிக்க உத்தரவு.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இவ்வளவு காலதாமதம் ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் C.V.கார்த்திகேயன், R.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், தமிழ்நாடு அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டனர்.

அதன்படி, தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு வழக்கை தனிப்பட்ட ஒரு விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கும் எண்ணம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிபிஐ விசாரணையில் ஏன் இவ்வளவு காலதாமதம் என வினவினர். ஒரே ஒரு காவல் ஆய்வாளர் மீது மட்டும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருப்பது ஏன் எனவும், ஒரு காவல் ஆய்வாளர் மட்டும் எந்த உத்தரவும் வராமல் அவரே 16 பேரையும் சுட்டாரா என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் நிலை என்னவென்று வினவிய நீதிபதிகள், உயிரிழந்த 16 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடுத் தொகையை உயர்த்தி வழங்க முடிவு உள்ளதா என அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

First Published :

Jul 24, 2026 12:32 PM IST

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 'சிபிஐ விசாரணைக்கு ஏன் இவ்வளவு காலதாமதம்?' - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

Read Entire Article