ஹோர்முஸ் நீரிணையில் 30க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்களை ஈரான் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. - படம்: இபிஏ
The US announces attacks on Iran for the 11th consecutive day.
The US military, via CENTCOM, announced it has concluded an 11-day attack on Iran. The operations targeted Iran's military operational facilities, maritime power centres, and aircraft/aerospace parking areas. These attacks aimed to further weaken Iran, which threatens commercial ships in the Strait of Hormuz. CENTCOM stated Iran had attacked over 30 commercial vessels, endangering sailors and undermining maritime navigation freedom.
Generated by AI
வாஷிங்டன்: ஈரான் மீது தொடர்ந்து 11வது நாளாக நடத்திய தாக்குதலை முடித்திருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் ராணுவச் செயல்பாட்டு நிலையங்கள், கடற்துறை ஆற்றல் மையங்கள், விமானம் மற்றும் வானூர்தி நிறுத்துமிடங்கள் போன்றவற்றைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக சென்ட்காம் எனப்படும் அமெரிக்க ராணுவ மத்திய தளபத்தியம் குறிப்பிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்களை அச்சுறுத்தும் ஈரானை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கத்தில் அந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் 30க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதாகக் கூறிய அந்த ராணுவ மையம், அத்தகைய தேவையற்ற தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான அப்பாவி மாலுமிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தியதுடன் கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் குலைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
.png)







English (US) ·