செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவில் கலந்துகொண்ட அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத். - படம்: ஏஎஃப்பி
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் போரின் செலவு இதுவரை US$37.5 பில்லியனைத் தொட்டுவிட்டதாக (S$48.4 பில்லியன்) அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
இது, கடந்த மே மாதம் கணிக்கப்பட்டதைக் காட்டிலும் US$8 பில்லியன் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர்நிறுத்தம் முடிந்த பின்னர் ஈரானை மீண்டும் தாக்கத் தொடங்கிய அமெரிக்காவின் அவசர நிதிக்கு அதிக ஒதுக்கீடு தேவைப்படுகிறது.
செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுக் கூட்டத்தில் அதுபற்றி கருத்துத் தெரிவித்த திரு ஹெக்செத், அவசர நிதி அதிகரிப்புக்கு செனட் உறுப்பினர்கள் அனுமதி தராவிடில் ராணுவப் பயிற்சிகளைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
ஈரான் மீது மீண்டும் கடுமையான குண்டுவீச்சுகளை அமெரிக்கா நடத்தத் தொடங்கிய பின்னர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) அந்தக் குழுவில் முதன்முறை காணப்பட்டார் அவர்.
மக்கள் விரும்பாத ஈரான் போரை நிதி வரம்புடன் தொடர்புபடுத்த எதிர்த்தரப்பு ஜனநாயகக் கட்சியினர் முயன்று வருகின்றனர்.
இடைப்பருவத் தேர்தல்களுக்கு இன்னும் ஆறு மாதங்களுக்குக் குறைவான காலமே உள்ள நிலையில், எதிர்த்தரப்பின் செயல்கள் காரணமாக ஆளும் குடியரசுக் கட்சியினர் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைகளில் தங்களது பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்ள கடும் போராட்டத்தை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு கையெழுத்தான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஈரானும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இது, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முழுமையான போர் வெடிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அண்மையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. மேலும் 420க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
.png)







English (US) ·