நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு ரத்து : யாருக்கு தெரியுமா?

23 hours ago 1
 தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை ரத்து செய்து தமிழ்நாடு அரசு இன்று (அக்டோபர் 13) அதிகாரபூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் நடப்பு கல்வியாண்டு (2025-26) முதலே அமலுக்கு வருகிறது.

 தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை-2025-ஐச் செயல்படுத்தும் விதமாக, மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Public exam

அந்தவகையில் நடப்புக் கல்வியாண்டு (2025-26) முதல், 2017-18 கல்வியாண்டிற்கு முன்னர் இருந்த நடைமுறையின்படி, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் மூலம் தேர்வுகள் நடத்தப்படும்.

 இந்த முடிவின் விளைவாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல், 11-ஆம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழுக்குப் பதிலாக, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் தனியாக வழங்கப்படும்.

 ஏற்கனவே 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த (அரியர் வைத்த) மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், வரும் 2030-ஆம் ஆண்டு வரை அரியர் தேர்வுகள் எழுதிக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 மாணவர்களின் கல்விச்சுமையைக் குறைத்து, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அவர்களைத் திறம்படத் தயார் செய்யும் நோக்கில் இந்தப் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Read Entire Article