"நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடையா..?" - தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

6 hours ago 7

Last Updated:May 12, 2026 9:18 PM IST

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகுதி திமுக வேட்பாள​ரான முன்​னாள் அமைச்​சர் பெரியகருப்பன் ஒரு ஓட்டு வித்​தி​யாசத்​தில் தவெக வேட்பாளர் சீனி​வாச சேதுப​தியிடம் தோல்​வியடைந்​தார்.

News18
News18

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தவெக சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் தொகுதி திமுக வேட்பாள​ரான முன்​னாள் அமைச்​சர் பெரியகருப்பன் ஒரு ஓட்டு வித்​தி​யாசத்​தில் தவெக வேட்பாளர் சீனி​வாச சேதுப​தியிடம் தோல்​வியடைந்​தார்.

அதையடுத்து மறு​வாக்கு எண்ணிக்கை முறை​யாக நடை​பெற​வில்லை என உயர்நீதிமன்றத்தில் பெரியகருப்பன் வழக்கு தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட சட்டபேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூரியகாந்த் முன்பு சீனிவாச சேதுபதி எம்.எல்.ஏ சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி முறையீடு செய்தார்.

இதனையேற்றுக் கொண்ட தலைமை நீதிபதி இந்த வழக்கை புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

"நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடையா..?" - தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Read Entire Article