நாமக்கல்: பள்ளியில் விஷப்பூச்சி கடித்து பரிதாபமாக உயிரிழந்த சிறுமி... போலீசார் விசாரணை...

21 hours ago 15

Last Updated:Feb 09, 2026 6:40 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த கவுண்டம்பாளையம் கிராமத்தில் அரசுப் பள்ளியில் விஷப்பூச்சி கடித்து எட்டு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News18
News18

நாமக்கல் அருகே பள்ளியில் விஷப்பூச்சி கடித்து எட்டு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன்-தனலட்சுமி தம்பதியின் 8 வயது மகள் ரக்‌ஷிதா, அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி ஆண்டு விழாவுக்கான நடன ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில் அதில் சிறுமி ரக்‌ஷிதா கலந்துகொண்டு நடனமாடியுள்ளார்.

யாரும் எதிர்பாராத நேரத்தில் ரக்‌ஷிதாவின் தலையில் விஷப்பூச்சி விழுந்து கடித்ததாக தெரிகிறது. இதனால் சிறுமி மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ரக்‌ஷிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Read Entire Article